ப்ளீஸ்… எங்க குழந்தையை போட்டோ எடுக்காதீங்க..! செய்தியாளர்களிடம் நோ சொன்ன ஸ்டார் தம்பதி…!!

Spread the love

பாலிவுட் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளாக விளங்குபவர்கள் விக்கி கவுசல் மற்றும் கத்ரீனா கைப். கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகும் இருவரும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டின் இறுதியில் இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தங்களது முதல் குழந்தைக்கு அவர்கள் ‘விஹான்’ என்று பெயரிட்டுள்ளனர்.

குழந்தை பிறந்தது முதல் தற்போது வரை விஹானின் முகத்தை ஊடகங்களுக்கோ அல்லது ரசிகர்களுக்கோ காட்டாமல் இந்த நட்சத்திர தம்பதி ரகசியமாகப் பாதுகாத்து வருகிறது. அண்மையில் மும்பை விமான நிலையத்திற்கு வந்த விக்கி கவுசல் – கத்ரீனா கைப் தம்பதியை அங்கிருந்த செய்தியாளர்கள் புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கத்ரீனா கைப், கைகளில் குழந்தையை வைத்திருந்ததால், தங்களைப் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று செய்தியாளர்களிடம் அன்போடு கேட்டுக்கொண்டார்.

மேலும், இம்மாத தொடக்கத்தில் தனது கணவர் விக்கி கவுசலின் பிறந்தநாளைக் கொண்டாடிய கத்ரீனா கைப், சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதிலும் மகன் விஹானின் முகம் மறைக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது. பாலிவுட்டில் அலியா பட் – ரன்பீர் கபூர், விராட் கோலி – அனுஷ்கா சர்மா போன்ற பல பிரபலங்கள் தங்களது குழந்தைகளின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காகப் புகைப்படங்கள் எடுக்கக் கூடாது என்ற கொள்கையைப் பின்பற்றி வரும் நிலையில், தற்போது விக்கி – கத்ரீனா தம்பதியும் இந்த வரிசையில் இணைந்துள்ளனர்.

Swetha

Recent Posts

தமிழக ரேஷன் கடைகளில் இனி ‘அது’ கிடையாது…. தவெக அரசின் அதிரடி உத்தரவு… ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்….!

தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குவது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும்…

8 minutes ago

“அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சிறுவன்”… கண்மாய் கரையில் காத்திருந்த அதிர்ச்சி…. நண்பர்களே செய்த வெறிச்செயல்… சிவகங்கையை உலுக்கிய பகீர் சம்பவம்….!

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் என்பவரின் 15 வயது மகன் அஸ்வின்,…

17 minutes ago

Breaking: “விஜய்க்கு நான் கொடுத்த பச்சைக்கொடி”… ஸ்டாலின் வெளியிட்ட அதிரடித் தகவல்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில்…

22 minutes ago

மகளிருக்கு ரூ.2500 உரிமைத்தொகை?… அதிகாரிகளுக்கு CM விஜய் போட்ட அதிரடி உத்தரவு…. இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (TVK) ஆட்சி அமைந்துள்ள நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத்தொகையை 2,500 ரூபாயாக…

27 minutes ago

உதயநிதி செய்த அந்த ஒரு தவறு… “மே 4 மாலை நடந்த ரகசிய பேரம்”… –திமுகவின் முகத்திரையை கிழித்த காங்கிரஸ் எம்பியின் எக்ஸ் பதிவு….!

தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையேயான மோதல் தற்பொழுது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்…

33 minutes ago

விஜய்யைப் பார்த்து ரூட்டை மாற்றிய அண்ணாமலை… இனிதான் ஆட்டமே…. கசிந்த அந்த ஒரு ரகசிய தகவல்… பரபரக்கும் அரசியல் களம்…!

தமிழ்நாடு பாஜகவின் முகமாக அறியப்பட்ட அண்ணாமலை, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக விலகியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும்…

45 minutes ago