தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஏ.ஆர் ரகுமான். ஆஸ்கார் விருது பெற்ற பெருமைக்குரியவர். இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கதீஜா மற்றும் ரஹிமா என்ற இரண்டு மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் மகன் இசையமைப்பாளராக முயற்சி மேற்கொண்டு வருகின்றார். ஏ ஆர் ரகுமான் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.
இந்த தம்பதியின் இரண்டு மகள்களில் மூத்த மகள் கதீஜாவுக்கு கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இரண்டாவது மகளும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளனர். இதனிடையே சமீபத்தில் ஏ ஆர் ரகுமான் அவரது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். 29 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது பற்றி சில சர்ச்சைகளும் தொடங்கியது. ஆனால் அதற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர். தங்கள் மீது பொய் சேதி பரப்பியவர்கள் அனைவரையும் எச்சரித்தனர். தற்போது இந்த பிரச்சனை ஓரளவுக்கு ஓய்ந்து உள்ளது.
இப்படியான நிலையில் ஏ ஆர் ரகுமான் இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இப்படியான நிலையில் ஏ ஆர் ரகுமான் மனைவி சாய்ரா பானு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஏ ஆர் ரகுமானின் முன்னாள் மனைவி என்ற தன்னை யாரும் அழைக்க வேண்டாம் என கூறியுள்ளார். தாங்கள் இருவரும் விவாகரத்து பெறவில்லை, பிரிந்து தான் வாழ்ந்து வருகிறோம். இன்று காலை உடலில் நீர்ச்சத்து குறைந்த காரணத்தால் ஏ ஆர் ரகுமான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
நாங்கள் இருவரும் இன்னும் சட்டபூர்வமாக விவாகரத்து பெறவில்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இருவரும் கணவன் மனைவி என்ற பந்தத்தில் தான் இருக்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். அவருக்கு எந்த வகையிலும் நான் அழுத்தம் தர விரும்பவில்லை. அதனால் என்னை ஏ ஆர் ரகுமானின் முன்னாள் மனைவி என்ற சொல்ல வேண்டாம் என்று ஊடகங்கள் வசம் கேட்டுக்கொள்கின்றேன். நாங்கள் பிரிந்தாலும் அவருக்காக இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…