நாம் பொதுவாகவே வழியில் செல்லும்போது ஏதாவது ஒரு பொருள் சாலையில் கிடந்தால் அந்த பொருள்களை நாம் நம்முடன் எடுத்து செல்வது பல சாபத்தையும் துரதிஷ்டத்தையும் கொண்டுவரும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல் சகுன சாஸ்திரங்களின்படி சில பொருள்களை எடுப்பதை நாம் தவிர்ப்பது நல்லது. அதையும் மீறி நாம் இந்த பொருள்களை எடுத்து வந்தால் அவை எதிர்மறை ஆற்றல்களை மட்டுமல்லாமல் துரதிஷ்டத்தையும் சுமந்து வரலாம் என்று கூறப்படுகிறது.
அதன்படி சாலையில் கிடக்கும் பணத்தை எடுப்பது அந்த பணத்தை இழந்தவர்களின் துரதிஷ்டத்தையும் கர்மாவையும் இழந்து வருவதாக கூறப்படுகிறது. தவிர்க்க முடியாத நிலையில் அந்த பணத்தை எடுத்தால் கோவில் உண்டியலில் போட்டு விடுவது அல்லது கஷ்டப்படுபவர்களுக்கு கொடுத்து விடுவது எதிர்மறை ஆற்றலை நீக்க உதவியாக இருக்கும்.
கத்தி, கத்திரிக்கோல், ஆணி மற்றும் ஊக்கு போன்ற கூர்மையான அல்லது இரும்பு பொருட்களை எடுக்கக்கூடாது. இரும்பு பொருள்கள் சனியின் காரக பொருள் என்பதால் இதன் மூலமாக எதிர்மறை ஆற்றல்கள் பரவும்.
சாலையில் கைவிடப்பட்ட குங்குமம், விபூதி, மஞ்சள், உடைந்து போன சாமி சிலைகள், படங்கள் ஆகியவற்றை தொடவோ அல்லது வீட்டிற்கு எடுத்து வரவோ கூடாது. இதனை நீர் நிலைகள் அல்லது கோவில்களில் எடுத்துச் சென்று வைத்துவிடுவதுதான் நல்லது.
தங்கம் உள்ளிட்ட நகைகள், உடைகள், கைக்குட்டைகள், தலைமுடி அல்லது பழைய சிறப்பு போன்ற ஒரு தனிநபர் பயன்படுத்தக்கூடிய பொருட்களை எடுக்கக்கூடாது. இது மாந்திரீக ரீதியான சடங்குகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
சமைத்து சாலையில் வீசப்பட்ட உணவுகள், பழங்கள் மற்றும் இனிப்புகள் ஆகியவற்றை வீட்டுக்கு எடுத்து வரக்கூடாது. குறிப்பாக திருவிழாக்கள் அல்லது சடங்குகளுக்கு பிறகு சாலையில் வைக்கப்பட்ட உணவுகளை எடுக்கக் கூடாது. இது சடங்குகளின் ஒரு பகுதியாக இருக்கலாம். எனவே இது போன்ற பொருட்களை வீட்டிற்கு எடுத்து வந்தால் உங்களுக்கு துரதிஷ்டம் தான் கிடைக்கும். அதனால் இனி இந்த பொருள்களை வீட்டுக்கு எடுத்து வருவதை தவிர்த்து விடுங்கள்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…