இன்றைய டிஜிட்டல் உலகில் ஒருவரின் தனி உரிமை பாதுகாப்பு என்பதை மிகப்பெரிய சவாலான ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இறந்தவர்களின் தனிப்பட்ட விவரங்கள் வெளியிடப்படுவது அவர்களின் குடும்பத்தினருக்கு மன உளைச்சலை தருகிறது. இப்படியான சூழலில் மருத்துவர் ஐசக் அப்பாஸ் வெளியீட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இன்றைய காலத்தில் ஒருவரின் மரணம் விழிப்புணர்வு என்ற பெயரில் பொது விவாதமாக்கப்படுவது, குடும்பத்தினருக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை தருகின்றது.
உயிரிழந்தவர்களின் பழக்கங்கள் மற்றும் காரணங்கள் போன்ற விவரங்களை அறியாமல் வீடியோக்கள் பேசி வெளியிடுவது மிகுந்த தவறு. உங்களுடைய குடும்பத்தில் இப்படி ஒரு இழப்பு ஏற்பட்டால் இவ்வாறு வீடியோ வெளியிட நீங்கள் விரும்புவீர்களா என்ற அவருடைய கேள்வியை பொதுமக்களை தற்போது சிந்திக்க வைத்துள்ளது. உண்மையிலேயே பெரும்பாலானோர் நல்ல எண்ணத்தோடு மட்டுமல்லாமல் பார்வையாளர்கள் மற்றும் பிரபலத்திற்காக இப்படியான பதிவுகளை வெளியிடுகிறார்கள் என்பதையும் மருத்துவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஒருவருடைய தனிப்பட்ட துயரத்தை பயன்படுத்தாமல் பொதுவான உதாரணங்கள் மூலம் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். அதே சமயம் சமூக வலைத்தளங்களில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…