#image_title
இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் காலமானார். அரசியலில் இருந்தாலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் மன்மோகன் சிங். அநாகரீகமாக பேசாமல் வெறுப்பை விதைக்காமல் தான்னுடைய லட்சியத்தை நோக்கி மட்டுமே முனைப்போடு பயணித்தவர் மன்மோகன் சிங். பஞ்சாப் மாகாணத்தில் பிறந்து வளர்ந்தவர் மன்மோகன் சிங்.
பெஷவாரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த மன்மோகன் சிங் பிறகு அமிர்தசரத்தில் உள்ள இந்துக்கல்லூரி மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகத்திலும் கல்லூரி படிப்பை முடித்தார். அதற்கு அடுத்ததாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தை படித்து முடித்தார் மன்மோகன் சிங். அதன் பிறகு இந்திய பொருளாதாரம் சார்ந்த பல்வேறு துறைகளில் பணியாற்றினார் மன்மோகன் சிங்.
இந்தியாவின் பிரபல பொருளாதாரம் சார்ந்த கல்வி நிறுவனமான டெல்லி பல்கலைக்கழகத்தில் கௌரவ பேராசிரியராக ஆக பணியாற்றினார். நேரு பல்கலைக்கழகத்தின் கௌரவ பேராசிரியராகவும், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் இயக்குனராகவும், நிதி அமைச்சகத்தில் செயலாளராகவும், பிரதமர் மோடியின் ஆலோசகர் என பன்முகங்களை கொண்டு பணியாற்றியவர் மன்மோகன் சிங்.
1991 ஆம் ஆண்டு இந்தியா மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது இந்தியாவின் நிதி ஆலோசகராக நியமிக்கப்பட்டார் மன்மோகன் சிங். அதற்குப் பிறகு பல திட்டங்களை உருவாக்கி இந்தியாவின் பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றவர் மன்மோகன் சிங். 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைமையின் பிரதமராக பல முக்கிய திட்டங்களை கொண்டு வந்து பல உலக தலைவர்களும் வியந்து பார்க்கும் அளவுக்கு செயல்பட்டவர் மன்மோகன் சிங்.
அப்படிப்பட்ட மன்மோகன் சிங் எப்போதுமே தனது தலையில் ஒரு நீல நிற டர்பானை அணிந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். எதற்காக இந்த நீல நிற டர்பனை அணிந்திருந்தார் வேறு எந்த கலர் டர்பனையும் அவர் அணியாமல் இருந்ததற்கான காரணம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? அதைப் பற்றி அவரே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.
மன்மோகன் சிங் அதைப்பற்றி கூறும் போது நான் வெளிநாட்டில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதும் ப்ளூ கலர் டர்பன்தான் போட்டிருப்பேன். அப்போது என்னை அங்கு இருக்கும் மாணவர்கள் ப்ளூ டர்பன் என்று பெயர் வைத்து அழைப்பார்கள். அது அப்படியே பழகிவிட்டது. எனக்கு நீல நிறம் பிடிக்கும் என்பதால் இந்த நீல நிற டர்பனை கட்டிக் கொண்டிருக்கிறேன் வேறு தனிப்பட்ட காரணம் எதுவும் கிடையாது என்று கூறியிருக்கிறார் மன்மோகன் சிங்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…