எக்கோஸ் நியூட்ரீசியன் முட்டைகளில் தடை செய்யப்பட்ட மற்றும் புற்றுநோயை தூண்டும் ஆன்டிபயாட்டிக் இருப்பதாக youtube ஒன்றில் மருத்துவர் வெளியிட்டுள்ள தகவல் தற்போது நாடு முழுவதும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய முட்டைகள் என்ற தலைப்பில் youtube-ல் வெளிவந்த ஒரு வீடியோ தற்போது பலரையும் கலங்கடித்துள்ளது. அதன்படி உயர்தர மற்றும் 100% ஆண்டிபயோடிக் இல்லாதது என்ற விளம்பரப்படுத்தப்படும் எக்கோஸ் நியூட்ரிஷியன் முட்டைகளில், தடை செய்யப்பட்ட மற்றும் புற்றுநோயை உருவாக்கும் பொருட்கள் இருப்பதாக கூறப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சர்ச்சை காண தொடக்கமாக மரு.மன்னனோரா தன்னுடைய பக்கத்தில் சோதிக்கப்பட்ட முட்டை மாதிரிகளில் AOZ எனப்படும் நைட்ரோபோரோன் என்ற தடை செய்யப்பட்ட ஆன்டிபயாட்டிக் இன் மாற்றுப் பக்க விளைவு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். முட்டை தொடர்பான ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த வகை முட்டைகள் பில்லியனுக்கு 0.73 மட்டுமே என்றாலும் தயாரிப்பு 100% ஆன்டி பயோடிக் இல்லாதது விளம்பரப்படுத்தப்பட்டதை கருத்தில் கொண்டால் இது நுகர்வோர் இடையே நம்பிக்கை சார்ந்த சந்தேகங்களை ஏற்படும்.
இந்த முட்டைகளில் உள்ள நைட்ரோப்ரான் என்ற நைட்ரோ இமிட்டசோல் போன்ற மரபணு நச்சுத்தன்மை கொண்ட இரு வேதிப்பொருட்கள் டிஎன்ஏ வை பாதிக்கக்கூடும் என்றும் அதனால் புற்றுநோய் அபாயம் உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார். இவருடைய இந்த வீடியோ தொடர்ந்து நாடு முழுவதும் பல மாநிலங்களில் முட்டைகள் உற்பத்தி மற்றும் அதன் திறனை கண்காணிக்க உணவு பாதுகாப்பு துறைக்கு பல்வேறு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முட்டையின் தரத்தை கண்காணிப்பதை தற்போது தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதற்காக முட்டையை முற்றிலுமாக ஒதுக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஏதோ ஒரு இடத்தில் நடக்கும் தவறுக்கு ஒட்டுமொத்தத்தையும் தவிர்க்க முடியாது. வரும் நாட்களில் ஆன்டிபயாட்டிக் ஊசிகள் செலுத்துவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் உணவு பாதுகாப்புத்துறை தரப்பில் விதிக்கப்பட உள்ளது. இதனால் மக்கள் தேவையில்லாமல் பயப்பட வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…
திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…