எல்லாமே பொய்யா கோபால்… “விஜய் கொடுத்த 300 ப்ரோமோஷன்.. பின்னணியில் இருந்த ‘அந்த’ 116 பேர் யார்?”…. திமுக உடைத்த ரகசியம்….!

Spread the love

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வரலாற்றில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு (AEE) செயற்பொறியாளர்களாக (EE) பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக தவெக (தமிழக வெற்றிக் கழக) அரசு பெருமிதத்துடன் விளம்பரப்படுத்தி வருகிறது. இத்தகைய பிரம்மாண்டமான நடவடிக்கை மின் வாரிய வரலாற்றிலேயே இதுவரை நிகழ்ந்திராத ஒன்று என தவெக தரப்பு கூறி வரும் நிலையில், தவெக அரசு மக்களை ஏமாற்றும் பித்தலாட்ட வேலைகளில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சியான திமுக மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக திமுக தரப்பு வெளியிட்டுள்ள விளக்கத்தில், “நாள் ஒரு பொய்! பொழுதொரு புளுகு! சோபா மாடல் தவெக ஆட்சியின் பித்தலாட்டம்…” எனச் சாடியுள்ளதுடன், இந்த பதவி உயர்வு தவெக அரசின் சாதனையல்ல, மாறாக முந்தைய திமுக அரசின் தொடர் முயற்சியே என்று சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2000-2001 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த உதவி பொறியாளர்களின் ‘Seniority’ (பணி மூப்பு) விவகாரம் நீண்ட காலமாக நீதிமன்றத்தில் இருந்து வந்த நிலையில், கடந்த மார்ச் 11, 2026 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பே இந்த முட்டுக்கட்டையை உடைத்தது என்றும், தீர்ப்பு வந்த மறுநாளே (மார்ச் 12, 2026) அப்போதைய திமுக அரசு 416 உதவி செயற்பொறியாளர்களை பதவி உயர்விற்குப் பரிசீலிக்கப் பட்டியலிட்டது என்றும் திமுக முந்தைய அரசாணை ஆவண ஆதாரங்களுடன் விளக்கியுள்ளது.

திமுகவின் இந்த அதிரடிப் பட்டியலைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் இந்த செயல்முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அமைந்துள்ள தவெக அரசு, அந்தப் பழைய செயல்முறையைத் தொடர்ந்துள்ளதே தவிர, இதில் புதிதாக எந்த வரலாற்றுச் சாதனையும் இல்லை என்று எதிர்க்கட்சி வாதாடுகிறது. மேலும், மின் வாரிய வரலாற்றில் ஒரே நேரத்தில் 700-க்கும் மேற்பட்டோருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்ட வரலாறுகள் (28.01.2024 மற்றும் 21.08.2025 ஆகிய தேதிகளில் வெளியான அரசாணைகள் படி) ஏற்கனவே இருக்கும் போது, 300 பேருக்கு வழங்கியதை “வரலாற்றில் முதன்முறை” எனத் திரித்து விளம்பரம் செய்வது ஒரு திரைப்பட விளம்பர நிறுவனம் போலச் செயல்படும் TN DIPR-ன் பொய் பிம்பம் என்றும் திமுக குற்றம் சாட்டியுள்ளது.

இறுதியாக, தகுதி வாய்ந்த 416 பேர் கொண்ட பட்டியலில் இருந்து தவெக அரசு ஏன் 300 பேருக்கு மட்டுமே தற்போது பதவி உயர்வு வழங்கியுள்ளது என்ற மிக முக்கியமான கேள்வியை திமுக எழுப்பியுள்ளது. மீதமுள்ள 116 பொறியாளர்களின் நிலை என்ன ஆனது, அவர்கள் தகுதியற்றவர்களா அல்லது பழிவாங்கும் நோக்கில் புறக்கணிக்கப்பட்டுள்ளார்களா என்று கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சி, இது குறித்து தவெக அரசு மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை (DIPR) மௌனம் காப்பது ஏன் என்றும், தகுதியுள்ள அனைவருக்கும் உடனடியாகப் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Share
Published by
Nanthini

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

9 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

10 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

10 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

10 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

10 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

10 மணத்தியாலங்கள் ago