விஜய்யுடன் சேர்ந்த விசிகவுக்கு முதல் அடி… திருமாவளவனைத் தவிக்கவிட்ட திமுகவின் ‘ஆப்ரேஷன் அறிவாலயம்’… அடுத்த விக்கெட் ஆளூர் ஷாநவாஸா….?

Spread the love

தமிழக அரசியல் களம் தற்பொழுது ஒரு புதிய, எதிர்பாராத திருப்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய்யின் புதிய அமைச்சரவையில் விசிக இணைந்தது அக்கட்சியின் வரலாற்றிலேயே முதன்முறையாக ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆனால், வெளியில் பார்க்கும்போது அதிகாரப் பகிர்வாகத் தெரிந்தாலும், உள்கட்சிக்குள் இது மிகப்பெரிய சித்தாந்த மற்றும் அதிகார மோதல்களை வெடிக்கச் செய்துள்ளது. தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்றதை திமுக தலைமை துளியும் விரும்பாத சூழலில், விசிகவில் இருக்கும் ஆளுமைகளையும் முக்கியப் புள்ளிகளையும் ஒவ்வொன்றாகத் தங்கள் பக்கம் இழுக்க திமுக மிகத் தீவிரமான அரசியல் வியூகம் வகுத்துச் செயல்படத் தொடங்கியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் இந்த அதிரடி நகர்வுக்கு முதல் விக்கெட்டாக விசிகவின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பனையூர் பாபு மாறியுள்ளார். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக செய்யூர் சட்டமன்றத் தொகுதியைத் தனக்காகக் குறிவைத்து உழைத்த பாபுவுக்கு, தலைமை சிந்தனைச் செல்வனுக்கு சீட் கொடுத்ததில் ஏற்கனவே அதிருப்தி இருந்தது. அத்துடன் நேற்று வரை யாரை “ஆர்.எஸ்.எஸ்-சின் பிம்பம்” என்று விசிக விமர்சித்ததோ, அதே தவெக-வுடன் தற்பொழுது கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இணைந்ததை கொள்கை ரீதியாக பாபுவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த உள்கட்சிப் பூசலையும் விரக்தியையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட திமுக தலைமை, அவரை நேரடியாகத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதன் பலனாக, வரும் ஜூன் 7-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் பனையூர் பாபு தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளார். அவருக்கு மதுராந்தகம் மற்றும் செய்யூர் உள்ளடக்கிய மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படலாம் எனப் பேசப்படுகிறது.

பனையூர் பாபுவைத் தொடர்ந்து, விசிகவின் மற்றொரு முக்கிய முகமான ஆளூர் ஷாநவாஸும் திமுகவின் அடுத்த டார்கெட்டாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த பேச்சு எழுந்துள்ளது. விசிகவின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற முக்கியப் புள்ளிகளைத் தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம், விசிகவின் அடித்தளத்தையே அசைக்க திமுக வியூகம் அமைத்துள்ளது. இந்த விவகாரம் விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த திருமாவளவன், இந்த ஆபத்தைத் தடுக்க அறிவாலயத்திற்குச் சென்று திமுக தலைமையிடம் நேரில் பேசிச் சமரசம் செய்ய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், “நீங்கள் தவெக அமைச்சரவையில் இணைந்துவிட்ட சூழலில், இப்போது திமுக தலைமையைச் சந்திப்பது அரசியல் ரீதியாக நன்றாக இருக்காது” எனத் தவெக தலைமை விசிகவுக்கு முட்டுக்கட்டைப் போட்டு, அந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தியதாகத் தகவல் கசிந்துள்ளது.

தவெகவின் இந்தத் தடையால் திருமாவளவனால் திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்த முடியாமல் போனது, விசிகவின் அதிருப்தி நிர்வாகிகள் எளிதாக திமுக பக்கம் சாய வழிவகை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பனையூர் பாபுவின் விலகலைத் தொடர்ந்து ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்ட அடுத்தடுத்த விசிக விக்கெட்டுகளை வீழ்த்த திமுகவின் வலை தயாராக இருக்கும் இந்தச் சூழல், தமிழக அரசியல் களத்தில் விசிகவுக்குப் பெரும் பலவீனத்தையும், திமுகவுக்குப் புதிய பலத்தையும் கொடுத்துள்ளது. சித்தாந்தக் கூட்டணியா அல்லது அதிகாரக் கூட்டணியா என்ற குழப்பத்தில் விசிக தொண்டர்கள் தவித்து வரும் நிலையில், திமுகவின் இந்த ராஜதந்திர நகர்வுகள் திருமாவளவனின் அரசியல் எதிர்காலத்திற்கே ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை… பொறுத்திருந்து பார்ப்போம்…!!!

Nanthini

Recent Posts

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

7 minutes ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

10 minutes ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

19 minutes ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

20 minutes ago

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

35 minutes ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

41 minutes ago