அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்… விஜய் மீது கை வைத்தால் செந்தில் பாலாஜிக்கு செக்… பதற்றத்தில் திமுக எடுத்த திடீர் முடிவு….!

Spread the love

தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கிய முதல் மாநாட்டிலேயே அரசியல் எதிரியாக திமுகவையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் விஜய் அறிவித்தது அனைவரும் அறிந்தது தான். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் விஜய்க்கான ஆதரவு அதிகரித்துக் கொண்டே சென்றது. இப்படியான நிலையில்தான் கரூரில் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனால் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு மிகப்பெரிய சிக்கல் எழுந்தது. டெல்லியின் உதவியை நாட நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகிய இருவரும் முயற்சி செய்தனர்.

அதன் பிறகு ஆதவ் அர்ஜுனா டெல்லிக்கு கமாண்டோ பாதுகாப்புடன் தனி விமானத்தில் பயணம் செய்தார். இந்த சம்பவத்தை பயன்படுத்தி தமிழக வெற்றி கழகம் கட்சியை தங்களின் கூட்டணிக்கு கொண்டுவர பாஜக பல வழிகளை கையாண்டு வருகின்றது. அதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் பாஜக எடுத்த கருத்துக்கணிப்பு என கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் பாஜக சார்பாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளில் விஜய்க்கு சுமார் 15 சதவீதம் வரை மக்களின் ஆதரவு இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்சாவின் பார்வைக்கு தேர்தல் ஆலோசகர்கள் கொண்டு சென்றதால் அவரும் ஆச்சரியமடைந்து கூட்டணிக்குள் தமிழக வெற்றி கழகம் கட்சியை கொண்டுவர முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. கரூர் சம்பவத்தை பெரிதாக்கி அரசியல் செய்வதன் மூலமாக திமுகவுக்கு எதிரான வலுவான கூட்டணியை கட்டமைக்க முடியும் என அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் நம்புகின்றன. இதனால் கரூர் சம்பவத்தின் பின்னணியில் திமுக தரப்பு தான் உள்ளது என சொல்லும் தமிழக வெற்றிக்கலகம் கட்சியினர் கருத்தை அதிமுக மற்றும் பாஜகவினர் வழிமொழிகிறார்கள்.

நடந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டிருக்கும் ஒரு நபர் கமிஷனின் விசாரணை நியாயமாக இருக்காது, விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என ஒரே குரலில் பாஜகவும் அதிமுகவும் சொல்வதன் பின்னணியில் கூட்டணி கணக்குகள் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் கரூர் சம்பவத்திற்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் விஜய் இடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். தற்போது விஜய்க்கு மத்திய அரசு வழங்கி வரும் சி ஆர் பி எப் பாதுகாப்பை இரண்டு மடங்காக்கும் வேலைகளை மத்திய உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. நெருக்கடியான சூழலில் ஆதரவாக இருப்பதன் மூலமாக தமிழக வெற்றிக்கழகம் தலைவர்களும் தொண்டர்களும் அதிமுக, பாஜக மற்றும் தமிழக வெற்றி கழகம் கூட்டணிக்கு தலைமையை வலியுறுத்துவார்கள் என திட்டமிட்டு அதற்கு ஏற்றது போல அமித்ஷா காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

ஒருவேளை எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுப்பது போல கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டால் சிபிஐ அதிகாரிகளை வைத்து திமுகவினருக்கு நெருக்கடி கொடுக்கும் வேலைகளை செய்ய அமித்ஷா தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் அமித்ஷா நினைப்பது போல எதுவும் நடந்து விடக்கூடாது என திமுக தரப்பு பதற்றத்தில் உள்ளது.

கரூர் வழக்கை சிபிஐ கையில் எடுத்தால் நிச்சயம் அது திமுகவுக்கு பாதகமாக அமையும் எனவும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து மொத்த திமுகவையும் தேர்தல் வேலை பார்த்த விடாமல் பாஜக செய்து விடும் எனவும் அமித்ஷாவின் திட்டங்களை அறிந்த திமுக தலைவர்கள் தலைமையிடம் கூறியுள்ளதாக தெரிகிறது. இந்த விஷயத்தில் வேகமாக செல்ல வேண்டாம் என்று பாஜக தரப்பையும் அமித்ஷாவையும் இருதரப்புக்கும் நெருக்கமானவர்களை கொண்டு சமாதானப்படுத்தும் முயற்சியில் திமுக களமிறங்கியுள்ளதாக அறிவாலயத்திற்கு நெருக்கமானவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Nanthini

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

5 மணத்தியாலங்கள் ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

5 மணத்தியாலங்கள் ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

8 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

8 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

8 மணத்தியாலங்கள் ago