ஸ்டாலின் தியாகத்தை கொச்சைப்படுத்திய முதல்வர் விஜய்?…. திமுக வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…. தமிழ்நாடு அரசியலில் நள்ளிரவு புயல்….!

Spread the love

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா காலகட்டத்தில் கைது செய்யப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் விஜய் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சினிமா கவர்ச்சி மற்றும் சமூக ஊடக போலியான பிம்பங்கள் மூலமாக மக்களை ஏமாற்றி, போலி வாக்குறுதிகளை அளித்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக அதில் சாடப்பட்டுள்ளது. மேலும், போதிய பலமில்லாத மைனாரிட்டி அரசை அமைக்க திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளில் வென்றவர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கி, குதிரை பேரம் நடத்தியே விஜய் முதலமைச்சராகியிருப்பதாகவும் திமுக கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.

பொறுப்பேற்றது முதல் முதலமைச்சர் விஜய் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதாகவும், திமுக அரசின் திராவிட மாடல் திட்டங்களை நிறுத்தியும் பெயர்களை மாற்றியும் ‘ஸ்டிக்கர் ஒட்டும்’ வேலையை மட்டுமே செய்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் நடமாட்டம் மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டதாகவும், இதில் த.வெ.க. நிர்வாகிகளே சிக்கி வரும் சூழலில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அரசு பாதுகாப்பதாக சாடியுள்ளது. ‘தெரியாமல் வாக்களித்து விட்டோம்’ என்று மக்கள் வருந்தும் நிலைக்கு ஆட்சி தள்ளப்பட்டுள்ளதால், அதைத் திசை திருப்பவே சட்டமன்றத்தை விஜய் ஒரு டயலாக் சூட்டிங் மேடையாக மாற்றியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற முரசொலி மாறன் மற்றும் திருமணமான ஐந்தே மாதத்தில் MISA சட்டத்தின் கீழ் கைதாகி ஓராண்டு காலம் சிறை சித்திரவதைகளை அனுபவித்த ஸ்டாலின் ஆகியோரின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தி விஜய் பேசியது கடுமையான கண்டனத்திற்குரியது என திமுக சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே இத்தகைய அருவருப்பான உரை நிகழ்த்தப்பட்டதில்லை என்றும், அவையின் மாண்பையும் மரபையும் காற்றில் பறக்கவிட்டு சட்டமன்றத்தைத் தந்திர மேடையாக த.வெ.க. அரசு பயன்படுத்தி வருவதாகவும் திமுக தனது அறிக்கையில் கொந்தளித்துள்ளது.

ஆட்சியின் தோல்விகளை மறைக்கவும், அதற்குப் பதில் சொல்ல முடியாமல் தப்பிக்கவும் முதலமைச்சர் விஜய் தரமற்ற பேச்சுக்களைப் பேசி வருவதாகச் சாடியுள்ள திமுக, இதைக் கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது. முதலமைச்சர் விஜய்யின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சைக் கண்டித்து, வரும் 12.09.2026 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

Nanthini

Recent Posts

காய்ச்சலால் துடித்த மகன்… அம்மாவின் அதிரடி முடிவால்… அதிர்ந்த மருத்துவர்… இணையத்தில் வைரல்…!

உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…

2 மணத்தியாலங்கள் ago

அடியே…. லிஃப்ட்டுக்குள்ள வராத… நாயை வைத்து அலப்பறை… ஆசிரியை அறைந்து தலைமுடியைப் பிடித்து இழுத்த பெண்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…

2 மணத்தியாலங்கள் ago

என்னை விடுங்கடா சாமி… சுற்றுலாப் பயணியை கெட்டியாக பிடித்துக்கொண்ட வௌவால்… அலறித் துடித்த நபர்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

எனக்கு எதுவுமே வேணாம்டா… தந்தையின் இந்த வார்த்தைக்கு… பின்னால் இவ்வளவு பெரிய வலி இருக்கா?… இணையத்தில் வீடியோ வைரல்…!

தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…

2 மணத்தியாலங்கள் ago

“பிரமிப்பூட்டும் லால்பாக் சா ராஜாவின் 3D அழைப்பிதழ்….” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முகப்புத் தோற்றம்…. இணையத்தில் வைரலாகும் பிரத்யேக வீடியோ…!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…

2 மணத்தியாலங்கள் ago

“லால்பாக் சா ராஜாவை தரிசித்த வித்யுத் ஜாம்வால்…” சங்கு ஊதி, உடுக்கை அடித்து பக்திப்பரவசம்…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…

2 மணத்தியாலங்கள் ago