திமுகவில் அதிரடி திருப்பம்…. இனி இவர்களுக்குப் பதவி கிடையாது?…. தலைமை எடுத்த திடீர் முடிவு…. ஸ்டாலின் போடும் மாஸ் பிளான்…!

Spread the love

திமுகவின் உட்கட்சி அமைப்பில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில், விரைவில் மறுசீரமைப்புக்கான செயற்குழு கூட்டத்தைக் கூட்டக் கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. இதில் கிளைக் கழகம் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரையிலான நியமனங்கள் மற்றும் உட்கட்சித் தேர்தல் முறைகள் குறித்துத் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் 70 வயதைக் கடந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு கிடையாது என்ற முக்கியத் தீர்மானம் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிகிறது. கட்சியின் கட்டமைப்பைப் பலப்படுத்த முதற்கட்டமாகத் தற்காலிகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அதன்பின்னர் முறைப்படி கழகத் தேர்தல்கள் மூலம் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

கட்சியின் நிர்வாகப் பணிகளை மேலும் துரிதப்படுத்த வார்டு மற்றும் தொகுதி அளவிலான பிரிவுகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 10 வாக்குச்சாவடி பாகங்களுக்கு ஒரு கிளைச் செயலாளர், 40,000 பேருக்கு ஒரு வட்டச் செயலாளர் மற்றும் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு மூன்று பகுதிச் செயலாளர்கள் எனப் புதிய வரைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில், மாநிலம் முழுவதும் மொத்தமாக 100 முதல் 120 மாவட்டச் செயலாளர்களை நியமிக்கத் தலைமை திட்டமிட்டுள்ளது.

இந்த மறுசீரமைப்பின் கீழ், சென்னை மாவட்டத்தில் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளது முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. அதனடிப்படையில், எம்பி பரந்தாமன், கே.கே.நகர் தனசேகர் ஆகியோருக்குப் புதிய மாவட்டச் செயலாளர் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அண்ணாநகர் எம்.எல்.ஏ எம்.கே. மோகனின் மகன் கார்த்திக் மற்றும் சோழிங்கநல்லூர் முன்னாள் எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ் ஆகியோருக்கும் மாவட்டச் செயலாளர் பதவிகள் வழங்‌கப்பட உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

ரோட்டில் நடக்கும் போது உஷார்… மின்னல் வேகத்தில் வந்த கார்… நொடியில் மாறிய இளைஞரின் தலைவிதி… இணையத்தை அதிரவைக்கும் CCTV காட்சி…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், வழக்கமான பரபரப்புடன் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் போக்குவரத்தும் பொதுமக்களின் நடமாட்டமும்…

24 minutes ago

இனி இதுதான் கதியா?… வெறிச்சோடி கிடந்த கவுண்டர்கள்… SBI கிளையில் காத்திருந்து நொந்துபோன மக்கள்… வாக்குவாதத்தால் பரபரப்பு…!!

வங்கிப் பணிகள் நடைபெறும் முக்கியமான வேலை நேரத்திலேயே, வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பல இருக்கைகள் ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடப்பது…

28 minutes ago

காரணம் தெரிந்தால் ஷாக் ஆவீங்க!… இப்படியும் ஒரு காதலா?… நடுரோட்டில் காதலனுக்கு தண்ணி காட்டிய இளம்பெண்… ஸ்தம்பித்த நெடுஞ்சாலை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், காதலன் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம் பெண் ஒருவர், நடுரோட்டில் சென்றுகொண்டிருந்த…

34 minutes ago

ரகசிய டீ பார்ட்டி… போட்டுக் கொடுத்த மர்ம நபர்… உணவகத்திற்குள் புயலென நுழைந்த மனைவி… கணவனுக்கும் தோழிக்கும் விழுந்த சரமாரி அடி…!!

சமூக வலைதளங்களிலும் பொது இடங்களிலும் நடக்கும் இத்தகைய நிகழ்வுகள், நமது சமூகத்தின் மனநிலையையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக்…

40 minutes ago

இதயம் இன்னும் படபடக்குது… இருளில் நேரில் கண்ட திகில் காட்சி… ஆன்மாவையே நடுங்க வைத்த அந்த ஒரு நொடி… தீபாவளி அமாவாசை இரவில் நடந்தது என்ன?…!!

தீபாவளியின் இந்த அமாவாசை இருள் இரவில், வானத்தைக் கிழித்துக்கொண்டு வெடிக்கும் வண்ணப் பட்டாசுகளின் வெளிச்சம் ஒரு நொடி மின்னி மறைந்தபோது,…

46 minutes ago

இப்படியொரு துணிச்சலா?… வாகனத்திலிருந்து பையை அபேஸ் செய்த மர்ம நபர்… சிக்கன் கடை வாசலில் நடந்த பகீர் சம்பவம்…!!

சூரியபேட்டை மாவட்டம் நெரேடுசெர்லா பகுதியில் உள்ள காந்தி சிக்கன் சென்டர் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ வாகனத்திலிருந்து மர்ம நபர் ஒருவர்…

51 minutes ago