“சுதந்திர தின விழாவில் திரிஷா… எங்கே போகிறது நாடு?”…. கையெழுத்துப் போட்ட கையோடு திமுக MLA பரபரப்பு பேச்சு….!

Spread the love

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில், நீதிமன்ற நிபந்தனைப்படி தனது இறுதிநாள் கையெழுத்தைப் பதிவு செய்த பின், விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். தமிழக முதல்வர் குறித்து அவதூறு மற்றும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீன் பெற்ற அவர், தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறைவு செய்த கையோடு இந்த விளக்கத்தை அளித்திருந்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மார்க்கண்டேயன், சுதந்திர தின விழாவில் நடிகை திரிஷா கலந்து கொண்டது குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்தார். “சுதந்திர தின விழாவில் நடிகை திரிஷா பங்கேற்றதைச் சுட்டிக்காட்டி, இந்த நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் இனிவரும் சந்ததியினருக்கு நல்லதொரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து” என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் கருத்துக்கள் குறித்துப் பேசிய அவர், “சட்டமன்றத்தில் நயினார் நாகேந்திரனை நான் பார்த்திருக்கிறேன். கட்சி எல்லைகளைத் தாண்டி சட்டமன்றத்திற்குள் அவர் நாகரிகமாகவே பேசியுள்ளார். தான் நாகரிகமாகத்தான் பேசியதாக அவரும் தெரிவித்துள்ள நிலையில், அவரது கருத்தைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை. இதில் கூறப்பட்டுள்ளது மிகவும் யதார்த்தமான ஒரு விஷயம் தான்” என்று குறிப்பிட்டார்.

வழக்குகள் மற்றும் மக்கள் மன்றம் குறித்துப் பேசுகையில், “என்னை வழக்கு போட்டு யாரும் அலைக்கழிக்கவில்லை; இதையெல்லாம் ஒரு அலைக்கழிப்பாகக் கருத முடியாது. இத்தகைய நிகழ்வுகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், அவர்களே கேள்வியும் எழுப்புவார்கள். எந்தச் சம்பவமும் நடக்காமல் அனைவரும் புத்தராகவே இருந்துவிட்டால் அவர்களின் யோக்கியதையை எப்படி அறிவது?” என்று கேள்வி எழுப்பினார். இறுதியாக, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது தொடர்பான கேள்விக்கு, முழுமையான அரசாணை வந்த பிறகே அதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

Nanthini

Recent Posts

“எந்த ஆவணமும் சிக்கல… தவெக அரசின் ஆட்டம் செல்லாது…” கே.என்.நேரு வீட்டில் 7 மணி நேர அதிரடி சோதனை… அரசியல் களத்தில் பரபரப்பு…!!

திருச்சியில் உள்ள முன்னாள் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற 7 மணி நேரத்…

1 minute ago

திமுகவை மிரட்டும் தவெக?… “உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சமாட்டோம்”…. சீறிய சேகர்பாபு…. அரசியலில் வெடித்த அடுத்த பரபரப்பு…!

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர்…

3 minutes ago

20 கோடி கடன் வாங்கி தர்றேன்… 2 கோடி கமிஷன் குடு…! ‘வில்லிவாக்கம் கர்ணன்’ முத்துவேலின் பகீர் மோசடி வலை… வெளிமாநில அதிபர்களை கதறவிட்ட அதிர்ச்சி சம்பவம்…!!

தொழிலதிபர்களிடம் குறைந்த வட்டியில் கோடிக்கணக்கில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி கமிஷன் தொகையைப் பெற்று மோசடி செய்து வந்த 'வில்லிவாக்கம்…

8 minutes ago

அடேங்கப்பா…! “ஸ்பெஷல் பாக்ஸ்”… வெறும் பேப்பர் கார்டு இல்ல… நகை பெட்டியே உள்ளே இருக்கு… அனிருத் – காவ்யா திருமண அழைப்பிதழின் பிரம்மாண்டம்…!!

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு அழைப்பிதழ் இணையத்தில்…

9 minutes ago

“24 மணிநேரத்தில் மாறிய வாழ்க்கை”…. மனு கொடுத்த ஒரே நாளில் இளைஞருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த CM விஜய்……!

சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய (ITI) வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, தினேஷ் என்ற மாற்றுத்திறனாளி…

14 minutes ago

“உன் மனைவியை என்னால் மறக்க முடியல…” காதலியின் கணவருக்கு மெசேஜ்… முன்னாள் காதலனுக்கு அரிவாள் வெட்டு… கன்னியாகுமரியில் அரங்கேறிய பயங்கரம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே, தன்னைவிட்டுவிட்டு வேறு திருமணம் செய்துகொண்ட முன்னாள் காதலிக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து, அவரது கணவனின்…

17 minutes ago