திமுக தோல்வி …. “எங்க இறுமாப்புதான் காரணம்”…. ஓபனாக உண்மைய ஒத்துக்கிட்ட முன்னாள் அமைச்சர் மூர்த்தி….!

Spread the love

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்ததற்கு திமுகவின் கவனக்குறைவும் இறுமாப்புமே காரணம் என்று முன்னாள் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற தென்மண்டல திமுக வழக்கறிஞர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மூர்த்தி, தேனி எம்.பி. தங்க தமிழ்செல்வன் மற்றும் திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய மூர்த்தி, நாம் அதிமுகவை எதிர்த்துப் போட்டியிட்ட சூழலில் தவெக ஆட்சியைக் கைப்பற்றிவிட்டதாகவும், அதேவேளையில் ஆட்சியை இழந்து தொண்டர்கள் சோர்வடைந்திருந்த நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் கட்சியினரிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய தேனி எம்.பி. தங்க தமிழ்செல்வன், சமூக வலைதளங்களில் வெளியான ‘ரீல்ஸ்’ உள்ளிட்ட தீவிரப் பிரச்சாரங்கள் மூலமாகவே தவெக ஆட்சிக்கு வந்ததாகவும், ஆனால் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை தவெக அரசு நிறைவேற்றவில்லை என்றும் சாடினார். தவெக ஆட்சியில் இதுவரை குறிப்பிடத்தக்க திட்டங்கள் எதுவும் கொண்டுவரப்படாததால் மக்கள் மௌனமாக இருப்பதாகவும், இந்த அமைதி வரும் தேர்தலில் திமுக மீண்டும் வலுப்பெற்று ஆட்சியில் அமர சாதகமாக அமையும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், உதயநிதி ஸ்டாலின் மீதான நடவடிக்கை கடந்த 2001-ம் ஆண்டு கலைஞர் கைது செய்யப்பட்டபோது ஏற்பட்ட அரசியல் உணர்வை மீண்டும் தட்டி எழுப்பியுள்ளதாகக் கூறினார்.

கூட்டத்தில் உரையாற்றிய திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, கொளத்தூர் தொகுதியில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெரும் கோளாறுகள் இருந்ததாகக் குற்றம்சாட்டினார். சுமார் 30 சதவீதத்திற்கும் அதிகமான இயந்திரங்கள் செயல்படவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், திமுக வழக்கறிஞர்கள் அரசியல் உணர்வோடு சட்ட அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். மேலும், அரசால் மேற்கொள்ளப்படும் சட்டத்திற்குப் புறம்பான கைது நடவடிக்கைகளை எதிர்த்துச் சட்டரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் துணிச்சலுடன் போராடும் பொறுப்பு திமுக வழக்கறிஞர் அணிக்கு இருப்பதாகக் கேட்டுக்கொண்டார்.

Nanthini

Recent Posts

“இன்று வெளியே வருவாரா அன்பில் மகேஸ்?”…. ஐகோர்ட்டில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்…. பரபரப்பில் அறிவாலயம்….!

லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…

34 minutes ago

தீபாவளி முடிந்த கையோடு போலீஸ் அதிரடி…. தமிழகம் முழுவதும் 1,000+ ரவுடிகள் கூண்டோடு கைது…. காலையிலேயே பரபரப்பு….!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…

36 minutes ago

பனையூரில் அதிரடி…. அமைச்சர்கள் முதல் MLA-க்கள் வரை கையெழுத்து வாங்கிய தவெக தலைமை…. முதல்வர் விஜய் போட்ட உத்தரவு….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…

39 minutes ago

BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இனி இயங்காது….. அரசு திடீர் முடிவு…. காலையிலேயே குடிமகன்களுக்கு ஷாக்….!

பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…

42 minutes ago

அம்மாடியோவ்… கைவிலங்கு அணிந்து 101 கி.மீ மலைப்பாதையை… கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தம்பதி… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!!

ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…

2 மணத்தியாலங்கள் ago