FLASH NEWS: திமுக-வில் அடுத்த விக்கெட் காலி… திடீரென விலகிய முக்கிய புள்ளி… செம ஷாக்கில் ஸ்டாலின்….!

Spread the love

கோவையைச் சேர்ந்த திமுகவின் முக்கிய பெண் நிர்வாகியான மீனா ஜெயக்குமார், கட்சியிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளது கோவை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கட்சிக்குள் பல்வேறு சலசலப்புகள் நிலவி வரும் சூழலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தான் விலகிக் கொள்வதாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

திமுகவின் கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் மாநில துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்த மீனா ஜெயக்குமார், ‘ஆலம் விழுதுகள்’ என்ற அறக்கட்டளை மூலம் கோவை பகுதியில் பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டு மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டவர் ஆவார். கடந்த மாநகராட்சித் தேர்தலின் போதே கோவை மேயர் வேட்பாளராக இவரது பெயர் பேசப்பட்டது. ஆனால், அப்போது சீட் மறுக்கப்பட்டதால் கட்சி நிர்வாகிகளுக்கு எதிராகப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்ட அவர், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் போட்டியிட வாய்ப்புக் கேட்டு காய்நகர்த்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அண்மையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினரான லீமா ரோஸ் மார்ட்டின் குடும்பத்தினரை மீனா ஜெயக்குமார் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, திமுகவினர் அவற்றுக்குக் கடுமையான எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் பதிவு செய்தனர். இந்த விமர்சனங்கள் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இதுவே அவர் கட்சியை விட்டு வெளியேறும் முடிவை எடுக்க முக்கியக் காரணமாக அமைந்தது.

தனது விலகல் குறித்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மீனா ஜெயக்குமார், லீமா ரோஸ் மார்ட்டின் தனது 20 ஆண்டு கால குடும்ப நண்பர் என்றும், நட்பின் ரீதியாகச் சந்தித்ததற்கு இவ்வளவு எதிர்ப்புத் தெரிவிப்பது முறையல்ல என்றும் கொந்தளித்துள்ளார். மேலும், திமுகவில் திறமையானவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்றும், கொங்கு மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுவதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்காத அதிருப்தியில் அவர் எடுத்துள்ள இந்த முடிவு, கோவை மாவட்ட திமுகவில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.

Nanthini

Recent Posts

டிரம்ப் போட்ட ஒற்றை ட்வீட்… ஈரானுடன் போர் நிறுத்தம்..? டெல்லியில் இருந்து உலகிற்கு.. இன்னும் சில மணி நேரத்தில் சொன்ன அமெரிக்கா நல்ல செய்தி…!!

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுடெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன்…

8 minutes ago

மனைவி மறைவுக்குப் பிறகு… உருக்கமான வீடியோ வெளியிட்ட நடிகர் முத்துக்காளை… கலங்கிப்போன ரசிகர்கள்…!

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு சமீபத்தில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று…

10 minutes ago

பெற்ற மகளின் கண்முன்னே கள்ளக்காதலனுடன் தனிமை!.. மகளுக்கு வலைவீசிய ‘சைக்கோ’ மாமா.. நெஞ்சை உலுக்கும் சிறுமியின் வாக்குமூலம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துராமன் என்பவரின் மனைவி மீனா (42). இந்த…

11 minutes ago

“வெறும் 20 அடிதானே” 7 வயது சிறுவனை அடித்து கை, அந்தரங்க உறுப்பை உடைத்த கொடூர முதல்வர்… பெற்றோர்களிடம் சொன்ன அலட்சிய பதில்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்தகா மாவட்டத்தில் உள்ள சேன்ஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முர்கிதோலர் கிராமத்தில் இயங்கி வரும் 'டாக்டர் பீம்…

27 minutes ago

BREAKING: நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் தொல்லை… தவெக நிர்வாகி அதிரடி கைது..!!

மதுரை கீழமாத்தூர் பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகத் தமிழக வெற்றிக் கழகத்தின்…

33 minutes ago

‘ஓடுவதை நிறுத்து’.. ஓடும் ரயிலில் அநாகரிகம்.. 3 முறை தப்பாக தோட்ட காமுகன்.. பெண் கொடுத்த அதிரடி ‘நோஸ் கட்’.. இணையத்தில் வைரலாகும் ‘சிட்னி இரயில்’ மோதல் வீடியோ..!!

சிட்னியில் ஓடும் ரயிலில் பயணித்த பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலும், அதற்கு அவர் காட்டிய துணிச்சலான எதிர்ப்பும் தற்பொழுது…

33 minutes ago