தமிழக அரசியல் களத்தில் நிகழ்ந்துள்ள ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ள திமுகவிற்கும், புதிதாக ஆட்சியமைத்துள்ள தவெகவிற்கும் இடையேயான அரசியல் மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. அரசின் செயல்பாடுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து திமுக தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடுகளில் முன்பு இருந்த தீவிரத்தன்மை தற்போது காணப்படவில்லை என்ற அதிருப்தி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பல மூத்த நிர்வாகிகள் அமைதி காப்பது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக உடன்பிறப்புகள் கவலை தெரிவிக்கின்றனர்.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் அரசின் முக்கிய செய்தித் தொடர்பாளர்களாகவும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உடனடியாகப் பதிலடி கொடுக்கும் முன்னணிப் படைகளாகவும் திகழ்ந்த சேகர்பாபு, கே.என்.நேரு, அன்பில் மகேஷ், பொன்முடி மற்றும் மா.சுப்பிரமணியம் போன்ற மூத்த நிர்வாகிகள் தற்போது ‘சைலண்ட் மோடில்’ மாறியுள்ளனர். கொளத்தூர் தொகுதியின் பொறுப்பாளராக இருந்த சேகர்பாபுவின் களப்பணிகள் குறைந்திருப்பதும், சமூக வலைதளங்களோடு தன் எதிர்வினைகளைச் சுருக்கிக் கொண்ட அன்பில் மகேஷின் நகர்வுகளும் கட்சிக்குள்ளேயே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. மேலும், நிலுவையில் உள்ள ஊழல் புகார்கள் மற்றும் தவெக அரசின் சட்ட நடவடிக்கை தொடர்பான அச்சமே இவர்களது அமைதிக்குக் காரணம் என்றும் பேசப்படுகிறது.
குறிப்பாக, திமுகவின் முக்கியத் தூணாகக் கருதப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தவெக ஆட்சியை வீழ்த்த சதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் தலைமறைவாக இருப்பது கொங்கு மண்டல திமுகவின் களப்பணியைப் பெரிதும் பாதித்துள்ளது. அவர் தற்போது சமூக வலைதளங்கள் மூலம் மட்டுமே இயங்கி வருகிறார். அதேவேளையில், வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சிப் பெரும்பாலான முன்னாள் அமைச்சர்கள் ஒதுங்கியிருக்கும் சூழலில், திமுக தலைமையும் அவர்களை ஓரங்கட்டி விட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இந்த மௌனச் சூழலுக்கு மத்தியில், முந்தைய ஆட்சியில் அமைதியாக இருந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது தீவிரமாகக் களமிறங்கி திமுகவின் முதன்மை உரத்தக் குரலாக மாறத் தொடங்கியுள்ளார். அதேபோல சென்னை மண்டலப் பொறுப்புகளில் சேகர்பாபுவின் இடத்தை நிரப்பும் வகையில் பரந்தாமன் போன்ற புதிய தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துச் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் தோல்விக்குப் பிறகு மூத்த நிர்வாகிகளின் இந்த தயக்கமும், புதியவர்களின் எழுச்சியும் வரும் நாட்களில் திமுகவின் உட்கட்சி அமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கும் என்பதையே உணர்த்துகின்றன.
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான நிதி ஆதாரங்களைக் கண்டறியும்…
அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, அமைச்சர் என். ஆனந்துக்கு எதிராக ஏற்கெனவே வழக்கு தொடர்ந்த தமிழக வெற்றிக்…
கர்நாடக மாநிலம் சுள்ளியா பகுதியில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான பாத்திமத் நிஷானா என்ற பெண் குடும்பத் தகராறு மற்றும்…
ஊழலற்ற நிர்வாகமே இலக்கு எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்து வரும் நிலையில், அவர் வசம் உள்ள…
திமுக எம்.எல்.ஏ-க்கள் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சென்று சந்திக்காதது கட்சியினரிடையே…
அதிமுகவிற்குள் உட்கட்சிப் பூசல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதை உணர்த்தும் வகையில் முக்கிய மூத்த தலைவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளுடன்…