தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களாக அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக, தற்போது அதிலிருந்து விலகி திமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மற்றும் அதிமுக தரப்பில் ராஜ்யசபா சீட் வழங்குவதாகக் கூறி நிறைவேற்றாத அதிருப்தி ஆகியவை, பிரேமலதா விஜயகாந்தை மாற்றுப் பாதையை நோக்கிச் சிந்திக்க வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், பெரும்பாலான நிர்வாகிகள் திமுக கூட்டணியே வெற்றிக்குச் சாதகமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், திமுக தரப்பிலிருந்து ஒரு முக்கிய அமைச்சர் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது. இந்த புதிய கூட்டணியில் தேமுதிகவிற்கு 7 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் எல்.சுதீஷிற்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பலமாக எழுந்துள்ளது.
அதே சமயம், அதிமுக தரப்பும் தேமுதிகவை சமாதானப்படுத்தி மீண்டும் தங்கள் அணிக்குள் கொண்டு வர 8 முதல் 10 தொகுதிகள் வரை தருவதாகத் தூது விட்டு வருகிறது. இருப்பினும், வரும் தேர்தலில் வெற்றி வாய்ப்பு எந்தப் பக்கம் உள்ளது என்பதைக் கணக்கிட்டு பிரேமலதா விஜயகாந்த் இறுதி முடிவை எடுப்பார் எனத் தெரிகிறது. பிரேமலதாவின் கார் அண்ணா அறிவாலயம் நோக்கிச் செல்லுமா அல்லது எம்.ஜி.ஆர் மாளிகை நோக்கிச் செல்லுமா என்பது இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தற்போதைய சூழலில் மிகவும் பலம் வாய்ந்ததாகக் கருதப்படும்…
தமிழக அரசியலில் நீண்டகாலமாகத் தனித்துப் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சியைத் தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் மற்றும் தமிழக…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது விடுத்த…
சென்னையில் 'ஜெப்டோ' (Zepto) ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தின் பொருட்களை நூதன முறையில் மோசடி செய்த வாடிக்கையாளரை, டெலிவரி ஊழியர்கள் கையும்…
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர்…
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் 3000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.…