“திமுக கூட்டணியில் தேமுதிகவின் ‘டபுள் கேம்'”… உதயசூரியனா? முரசு சின்னமா?… அண்ணியார் எடுத்த அதிரடி முடிவு….!

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணியில் தேமுதிகவின் தொகுதி பங்கீடு குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்குப் பிறகு, பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, இம்முறை திமுக கூட்டணியில் இணைந்து களம் காண உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகளை கச்சிதமாக முடித்து, ராஜ்யசபா சீட் உள்ளிட்ட முக்கிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியுள்ள தேமுதிக, தற்போது எத்தனை தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தரப்பில் தேமுதிகவிற்கு இரண்டு முக்கிய விருப்பத் தேர்வுகள் (Options) வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலாவதாக, 6 தொகுதிகள் + 1 ராஜ்யசபா சீட் எனத் தேர்வு செய்தால், அதில் 4 தொகுதிகளில் ‘முரசு’ சின்னத்திலும், 2 தொகுதிகளில் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலும் போட்டியிடலாம். இரண்டாவதாக, 8 தொகுதிகள் + 1 ராஜ்யசபா சீட் என்ற தேர்வை எடுத்தால், அனைத்து 8 தொகுதிகளிலும் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தேமுதிகவைப் பொறுத்தவரை, இதுவொரு மிக முக்கியமான தேர்தலாகும். கடந்த கால தேர்தல்களில் கட்சியின் வாக்கு சதவீதம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி கட்சியின் அங்கீகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் பிரேமலதா விஜயகாந்த் உள்ளார். எனவே, தங்கள் கட்சியின் தனித்துவமான ‘முரசு’ சின்னத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதா அல்லது வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய அதிக தொகுதிகளுடன் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடுவதா என்ற இக்கட்டான சூழ்நிலையில் தேமுதிக தலைமை உள்ளது.

விஜய் உள்ளிட்ட புதிய அரசியல் சக்திகளின் வருகையால் 2026 தேர்தல் களம் மிகுந்த சவால்கள் நிறைந்ததாக மாறியுள்ளது. இதனால், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களைக் குறைத்துக் கொள்ள திமுக தலைமை அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், தேமுதிக எந்த மாதிரியான முடிவை எடுக்கப்போகிறது என்பது அரசியல் கவனிப்பாளர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் இல்லாத இந்த முதல் தேர்தலில், பிரேமலதா விஜயகாந்தின் இந்த கூட்டணி வியூகம் தேமுதிகவிற்கு எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

4 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

5 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

6 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

6 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

6 மணத்தியாலங்கள் ago