தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு அணிகளும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளைத் தங்கள் பக்கம் இழுக்க இரு திராவிடக் கட்சிகளும் கடும் போட்டியில் இறங்கியுள்ளன. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொங்கலுக்குப் பிறகு கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில், தற்போது அரசியல் நகர்வுகள் தேமுதிகவைச் சுற்றியே மையம் கொண்டுள்ளன.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுகவுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் ராஜ்யசபா சீட் வழங்கப்படாத விவகாரம் போன்ற காரணங்களால், தேமுதிக தற்போதைக்கு அதிமுக பக்கம் சாய வாய்ப்பில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதே சமயம், அதிக தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா சீட் எதிர்பார்ப்பால் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடனும் கூட்டணி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்தச் சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட திமுக தலைமை, தேமுதிகவை நோக்கித் தூதுவிட்டுப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
நம்பத்தகுந்த வட்டாரங்களின்படி, திமுக தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட முக்கிய நபர் பிரேமலதாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. தேமுதிகவிற்கு இரட்டை இலக்கத் தொகுதிகளுடன், ஒரு ராஜ்யசபா இடத்தையும் ஒதுக்க திமுக சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. தற்போதைய சூழலில் திமுக கூட்டணி பலமாக இருப்பதாலும், கருத்துக்கணிப்புகள் சாதகமாக இருப்பதாலும் பிரேமலதா திமுகவின் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் புதியதொரு கூட்டணி மாற்றம் உறுதியாகியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…