2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலையை தொடங்கிவிட்டன. இந்த 2026 ஆம் ஆண்டு தேர்தலில் 4 முறை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக்கலகம் ஆகிய நான்கு முனை போட்டியின் நிலவும் சூழலில் திமுக கூட்டணி மிக வலுவாக உள்ளது. 2026 ஆம் ஆண்டு தேர்தலில் இந்தக் கூட்டணி அபார வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மமக, மஜக, தவாக உள்ளிட்ட கட்சிகள் இருக்கும் நிலையில் கூட்டணி மிக வலுவாக உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக செயலாற்று வருகின்றார். இதுவரை அடுத்தடுத்து இரண்டு முறை திமுக ஆட்சி அமைத்ததில்லை. அதேபோல அடுத்தடுத்து இரண்டு தேர்தல்களில் அதிமுக தோற்றதில்லை என்ற வரலாற்றை தொடர வைக்க எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்து வருகின்றார்.
இப்படியான சூழலில் மாநிலங்களவை எம்பி பதவியை அதிமுக தராததால் அதிருப்தியில் தேமுதிக இருப்பதாகவும் ஆகையால் கட்சியின் எதிர்காலம் கருதி திமுக கூட்டணியில் இடம்பெற பேச்சுகள் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளை தேமுதிக கேட்பதாகவும், அதனை தருவதற்கு திமுக தலைமையும் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது. விஜயகாந்த் இருந்தவரை திமுகவுடன் கூட்டணி அமைக்காத நிலையில் இந்த முறை தேமுதிக திமுகவுடன் கூட்டணி அமைவது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது. இதனால் மேலும் திமுகவுக்கு வலு சேர்ந்துள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்வதென்று திகைத்து கொண்டிருக்கிறார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…