“2026-ல் விஜயகாந்த் பாணி மேஜிக்”… தேமுதிக கேட்ட அந்த மெகா லிஸ்ட்…. கூட்டணி கட்சிகளுக்கு டிமிக்கி கொடுக்கும் அண்ணியார்….!

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேமுதிக தனது கூட்டணி நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்காமல் இழுபறி நிலையில் வைத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளும் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்து வரும் நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மௌனம் காத்து வருவது தேர்தல் களத்தில் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

அதிமுக தரப்பில் தேமுதிகவிற்கு 8 சட்டமன்றத் தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாகத் தெரியவருகிறது. ஆனால், தேமுதிக தரப்போ 21 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் மத்திய அமைச்சர் பதவி என பெரிய அளவிலான கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் திமுக கூட்டணியிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட முடிவை நோக்கியே பிரேமலதா காத்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்க்கும் பட்சத்தில், அந்த வெற்றிடத்தைப் பயன்படுத்தி கூடுதல் தொகுதிகளைப் பெறலாம் என்பது தேமுதிகவின் திட்டமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, பத்து சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கிடைத்தால் திமுக கூட்டணியில் இணைய தேமுதிக ஆர்வம் காட்ட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இருப்பினும், தேமுதிக ஒரே நேரத்தில் இரு திராவிடக் கட்சிகளுடனும் அதிகப்படியான தொகுதிகளைக் கேட்டுப் பேரம் பேசி வருவது அந்தந்த கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இழுபறி நீடித்தால், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே தேமுதிகவை கழற்றிவிடவும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் 2026 தேர்தலில் தேமுதிகவின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பது வரும் நாட்களில் தெளிவுபெறும்.

Nanthini

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

5 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

5 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

5 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

5 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

6 மணத்தியாலங்கள் ago