2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேமுதிக அதிகாரப்பூர்வமாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து கூட்டணி குறித்து உறுதி செய்தார். தொண்டர்களின் விருப்பம் மற்றும் மறைந்த தலைவர் விஜயகாந்தின் தொலைநோக்குப் பார்வையை முன்னிறுத்தி, இந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டணியின் ஒரு பகுதியாக, தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தேமுதிக பொருளாளர் எல்கே சுதீஷ் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பாஜக மற்றும் தவெக போன்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட நிலையில், இறுதியில் திமுக கூட்டணியைத் தேமுதிக தேர்வு செய்திருப்பது தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் தற்போது காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள் மற்றும் மதிமுக உள்ளிட்ட 22 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், தேமுதிக புதிதாக இணைந்ததும் அந்த கட்சிக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், இது பழைய கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. குறிப்பாக, சட்டமன்றத் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இந்த அதிருப்தி அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.
தொடக்கத்தில் தேமுதிகவுக்கு 10 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் வழங்க திமுக திட்டமிட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும், கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் கடுமையான அழுத்தத்தால், அந்த எண்ணிக்கையை 6 அல்லது 7 தொகுதிகளாகக் குறைப்பது குறித்து திமுக மேலிடம் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி தர்மத்தைக் காக்கவும், அதிருப்தியில் உள்ள கட்சிகளைச் சமாதானப்படுத்தவும் திமுக தரப்பு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…
மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலைப் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட பிரபல நகைக்கடையின் புதிய கிளையில் சுமார் 21…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…