‘கைவிட்ட’ தவெக… ‘கைக்கோர்க்கும்’ அதிமுக…. முன்னாள் அமைச்சர்களின் மாஸ்டர் பிளான்… CM விஜய்க்கு அடுத்தடுத்து காத்திருக்கும் ஷாக்….!

Spread the love

அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் சிலர், கட்சி நிர்வாகத்தில் தங்களுக்குத் தேவையான முக்கியத்துவமும் பதவிகளும் கிடைக்காததால் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. செம்மலை, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி. சம்பத், வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜூ மற்றும் வைகைச்செல்வன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தவெகவில் தங்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பதாக உணர்வதாகக் கூறப்படுகிறது. புதிதாகத் தொடங்கப்பட்ட கட்சியில் எதிர்பார்த்த அளவுக்குத் தலைமை அங்கீகாரம் வழங்காததால், மீண்டும் தங்களது பழைய தாய்க்கட்சியான அதிமுக பக்கமே திரும்பிச் சென்றுவிடலாமா என இவர்கள் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.

மறுபுறம், கட்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அதிமுகவில் இருந்து விலகி மாற்றுக்கட்சிகளுக்குச் சென்ற மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை மீண்டும் அதிமுகவிலேயே இணைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி சிறப்புத் தலைவர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்துள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தக் குழுவின் வருகையும், அதிமுக தலைமையின் இந்தச் சாதகமான நடவடிக்கையும் தவெகவில் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் அதிமுகவிற்குத் திரும்புவதற்கான நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனால், வரும் நாட்களில் தமிழக அரசியல் களத்தில் முக்கியக் கட்சித் தாவல்கள் மற்றும் மாற்றங்கள் நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

மருத்துவமனையில் VS பாபு… 40 நாட்களாகத் தொடரும் மர்மம்…. வாய்திறக்க அஞ்சும் அமைச்சர்கள்….. வெளியான பரபரப்பு தகவல்….!

வி.எஸ். பாபு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர்…

3 minutes ago

குஷியோ குஷி…. தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ரேஷன் கடைகளிலும்… காலையிலேயே அரசு சூப்பர் குட் நியூஸ்….!

தமிழகம் முழுவதும் இன்று (நவம்பர் 6) அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

7 minutes ago

என் மகளின் உயிரை எடுத்தவளுக்கு எப்படி ஜாமீன்?… கதறும் தாயின் கண்ணீருக்கு… நீதி வழங்கிய உயர் நீதிமன்றம்…!!

ட்விஷா ஷர்மா மரண வழக்கில் முக்கியக் குற்றம் சாட்டப்பட்டவரான கிரிபாலா சிங்கின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

10 minutes ago

ரூ.70 கோடி பேரம்… ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக…. தவெக ஆட்சியை கவிழ்க்க மெகா பிளான்?…. குதிரை பேரத்தில் சிக்கிய தமிழக அரசியல்….!

தமிழக அரசியல் களத்தில் இதுவரை கேள்விப்பட்டிராத 'குதிரை பேரம்' என்ற சொல், தற்போது பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்து அரசியல் சூட்டை அதிகரிக்கச்…

10 minutes ago

நள்ளிரவில் வந்த ஹேப்பி நியூஸ்…. ஊழியர்களுக்கு மெகா சர்ப்ரைஸ்…. கணக்கில் தடாலடியாக ஏறிய ரூ.12,000…. அரசு கொடுத்த அதிரடி தீபாவளி கிஃப்ட்….!

தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கு அரசு சமீபத்தில் அறிவித்த அகவிலைப்படி உயர்வுத் தொகை, தற்போது ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக…

16 minutes ago

ஐயோ… பரசூட் விரியல… காப்பாத்துங்க… 2,000 அடி உயரத்தில் துடித்த… ரஷிய வீரர் கொடூர பலி… நெஞ்சை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

ரஷியாவின் வதுலினோ விமான நிலையத்தில் நடைபெற்ற ‘விா்போர்ட் ஃபோர்சஸ் டே’ கொண்டாட்டங்களின் போது ஒரு கொடூரமான விபத்து நிகழ்ந்தது. சோவியத்…

17 minutes ago