Categories: சினிமா

என் பையனை இயக்குனர் ஆக்காமல் நடிகன் ஆக்கியது இதற்காக தான்…ஒபனாக பேசிய இயக்குனர் விக்ரமன்…

Spread the love

விக்ரமன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் ஆவார். இவர் சிறப்பான குடும்ப கதைகள் செண்டிமெண்ட் கொண்ட படங்களை இயக்கத்திற்காக பிரபலமானவர். ஆரம்பத்தில் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார் விக்ரமன். 1990 ஆம் ஆண்டு புது வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் விக்ரமன்.

தொடர்ந்து கோகுலம் நான் பேச நினைப்பதெல்லாம் போன்ற படங்களை இயக்கினார். 1996 ஆம் ஆண்டு நடிகர் விஜயை வைத்து பூவே உனக்காக என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அடுத்ததாக 1997 ஆம் ஆண்டு சரத்குமார் தேவயானி வைத்து சூரிய வம்சம் படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் மெகா ஹிட் ஆகி இன்றளவும் எவெர்க்ரீன் படமாக இருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழ்நாடு மாநில அரசு விருதுகளையும் வென்று இருக்கிறது.

அடுத்ததாக 1998 ஆம் ஆண்டு உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் பல விருதுகளை பெற்றது. அடுத்ததாக 2000 ஆம் ஆண்டு வானத்தைப்போல திரைப்படத்தை இயக்கினர் விக்ரமன். இந்த திரைப்படமும் சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில விருது மற்றும் பல விருதுகளை வென்றது.

2002 ஆம் ஆண்டு உன்னை நினைத்து படத்தை சூர்யா லைலாவை வைத்து இயக்கினார் விக்ரமன். இந்த திரைப்படமும் தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதை வென்றது. இப்படி தொடர்ந்து மாநில திரைப்படம் விருதுகளை வென்ற பல நல்லதொரு படங்களை இயக்கி புகழ்பெற்றார் விக்ரமன். அடுத்ததாக பிரியமான தோழி கடைசியாக 2014 ஆம் ஆண்டு நினைத்தது யாரோ ஆகிய படங்களை இயக்கினார். குறைவான படங்களை இயக்கியிருந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் விக்ரமன். தற்போது விக்ரமின் மகன் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இதைப் பற்றி அவர் ஒரு நேர்காணலில் பகிர்ந்து இருக்கிறார் விக்ரமன்.

விக்ரமன் கூறியது என்னவென்றால் நான் இயக்குனர் என்னுடைய பையனை ஏன் இயக்குனர் ஆக்காமல் நடிகர் ஆக்கியது ஏன் என்று என்னிடம் கேட்கிறார்கள். நான் என்னுடைய மகனை சினிமாவிற்கு வர வேண்டாம் என்றுதான் சொன்னேன். அவன் 10 12 பிஇ மெக்கானிக் எல்லாவற்றிலும் 95% நல்ல மார்க் எடுக்கக்கூடிய பையன். மற்ற அப்பாக்களை போலவே படித்து முடித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவன் தான் சினிமாவில் நடிக்கிறேன் என்று கூறினான். அதான் அவனுடைய ரூட்டிலேயே போய் பார்க்கலாம் அவனை டிஸ்கரேஜ் பண்ண கூடாது என்று அவன் விருப்பம் போல நடிகன் ஆகட்டும்னு ஒத்துக் கொண்டேன் என்று ஓபனாக கூறியிருக்கிறார் விக்ரமன்.

admin

Recent Posts

வழக்கை முடித்த CBI… மாயமான கல்லூரி மாணவி… போராடி மீண்டும் விசாரணையை தொடங்கிய தந்தை… வெடிக்கும் புதிய திருப்பம்…!!

2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…

6 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி சம்பவம்..! பாட்டிலில் பட்டாசு செய்த சிறுவன்… நொடியில் பறிபோன கண்பார்வை… கதறும் குடும்பம்… பதறவைக்கும் சம்பவம்…!!

ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…

6 மணத்தியாலங்கள் ago

கடவுளின் அவதாரமா?… அறுவை சிகிச்சை சாத்தியமா?… மருத்துவ குறைபாடா?… இயற்கையின் விசித்திரப் பிறவி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…

6 மணத்தியாலங்கள் ago

“வீட்டுக்குள் அடைக்கப்பட்ட மனைவி…” 3 நண்பர்களை அனுப்பி பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…

6 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… மாடல் கடையில் புகுந்து மது பாட்டில்களை… அடித்து நொறுக்கிய பெண்களின் ரகளை… உ . பி – யில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…

6 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?… தெரு நாயை தடியால் அடித்து நொறுக்கிய குடியிருப்பு சங்கத்தினர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

6 மணத்தியாலங்கள் ago