Categories: சினிமா

“நான் அதை சொல்ல மாட்டேன்”.. விடுதலை 2 டிரெய்லர் வெளியீட்டு விழாவில் திடீரென கோபப்பட்ட வெற்றிமாறன்.. வைரலாகும் வீடியோ..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவருடைய இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சூரி கதையை நாயகனாக நடித்த இந்த திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த சூரியன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருடன் மஞ்சு வாரியார் மற்றும் கிஷோர் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படியான நிலையில் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, சூரி, வெற்றிமாறன் மற்றும் இளையராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் படம் குறித்து பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்ட நிலையில் நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பேசும்போது படத்தில் பணியாற்றி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

எனது உதவியாளர்கள், தயாரிப்பு உதவியாளர்கள் இவர்கள் அனைவருமே இந்த படம் உருவாக முக்கிய காரணமாக இருந்துள்ளனர். அவர்களின் ஒத்துழைப்பில்தான் இந்த திரைப்படம் என்று வெற்றிமாறன் பேச, அப்போது அருகில் இருந்த ஒருவர் அவர் பெயர் சொல்லுங்க என்று கூறியுள்ளார். இதனை கேட்ட வெற்றிமாறன், டேய் நான் தான் யார் பெயரையும் சொல்ல மாட்டேன் என்று சொல்லிட்டேன்ல, ஏன்டா, டீம் அப்படி சொன்னா எல்லோரும்ன்னு தான் அர்த்தம் என்று சொல்லிவிட்டு நன்றி எனக் கூறி மைக்கை வேகமாக வைத்துவிட்டு வெற்றி மாறன் சென்றார்.

திடீரென மேடையில் கோபப்பட்ட வெற்றிமாறனின் இந்த செயலைப் பார்த்த இளையராஜா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் ஷாக்காண நிலையில் வெற்றிமாறன் அவர்களுக்கு அருகில் சென்று தனது நிலையை விளக்கமாகக் கூறினார். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

Nanthini

Recent Posts

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

6 seconds ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

3 minutes ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

8 minutes ago

“50 வருஷத்துக்கு அப்புறம் வரும் வாய்ப்பு”… விஜய்க்காக களமிறங்கிய அப்பா… இணையத்தை உலுக்கும் வீடியோ…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…

12 minutes ago

“பிரச்சாரத்தில் செருப்பு வீச்சு.. அதிர்ச்சியில் திவ்யா சத்யராஜ்”…. தளபதி விஜய்க்கு விடுத்த பகிரங்க எச்சரிக்கை…!

திமுக ஐடி விங்கின் மாநில துணைச் செயலாளரும், பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக…

17 minutes ago

“கர்ப்பமாக்கினால் 25 லட்சம்…” புதுச்சேரியில் விடுதி மேலாளரை வளைத்த ஆபாச மோசடி…. பகீர் பின்னணி…!!

புதுச்சேரியில் விடுதி மேலாளர் ஒருவரிடம் நூதன முறையில் லட்சக்கணக்கில் பணம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்த கும்பல் குறித்துப்…

19 minutes ago