தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர்தான் இயக்குனர் பிரேம்குமார். இவர் கன்னட சினிமாவில் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். 1976 ஆம் ஆண்டு பிறந்த இவர் நடிகையாக இருந்து தயாரிப்பாளராக மாறிய ரக்ஷிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சூர்யா என்ற ஒரு மகனும் உள்ளார். பிரேம் முதலில் தனது பணியை 1993 ஆம் ஆண்டு நிஸ்கர்ஷா என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக தொடங்கினார். அவர் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பை தொடர்ந்தார். படம் முடிந்ததும் பெங்களூருக்கு திரும்புவதற்கு முன் படிப்பை முடிக்க அவர் தனது சொந்த ஊருக்கு திரும்பினார். பின்னர் ஜிகே முத்துராஜுடன் இணை இயக்குனராக ஒரு சில படங்களில் பணியாற்றினார்.
கரியா என்ற படத்தை இவர் முதல் முதலில் இயக்கிய நிலையில் அந்த படத்தில் நிஜ வாழ்க்கையின் பெரிய டான்களை தேர்ந்தெடுத்ததற்காக ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பிரேம் தமிழில் 96 திரைப்படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்த நிலையில் அனைவருடைய பள்ளி பருவ நினைவுகளை எடுத்துச் செல்லும் படமாக இந்த படம் அமைந்திருந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரேம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். தற்போது கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண் மற்றும் ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படத்தை பிரேம்குமார் இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் பிரேம் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். அதில், நான் என்னுடைய முதல் சம்பளத்தை அல்போன்ஸ் ராய் சார் கிட்ட இருந்து தான் வாங்கினேன். 2000 ஆம் காலகட்டத்திலேயே என்னுடைய சம்பளம் ஒரு நாளைக்கு 1500. சில நேரங்களில் 3000 ரூபாய் சம்பளம் கூட கொடுத்துள்ளார். அந்த அளவுக்கு பணத்தை வாரி இறைப்பார். அவர்கிட்ட ஒரு டைம் போயிட்டு வந்தா ஒரு வருஷத்துக்கு நாம் எந்த வேலைக்கும் போகாம ஏதாவது ஒன்னு பண்ணிட்டு இருக்கலாம்.
ஒரு டைம் என்கிட்ட காசு ரொம்ப அதிகமாயிருச்சு. அப்போ அந்த காச வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியல. வண்டிக்கு பெட்ரோல் போடுவதை விட வேற எந்த செலவு எனக்கு இல்ல. டீ கூட வெளியில குடிக்க மாட்டேன். அப்போ அவர்கிட்டயே போய் இவ்ளோ காசு தரீங்க இதை வைத்து எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல என சொன்னேன். உடனே அவரு, இந்த ப்ராஜெக்ட் சம்பளத்தை நான் உனக்கு தரல மொத்தமா வச்சிருந்து உனக்கு ஒரு லைஃப் மீட்டர் வாங்கி தரேன் என்று கூறினார். அந்த அளவிற்கு தாராள மனசு கொண்டவர் என்று பிரேம் புகழ்ந்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டம், பரௌத் கொத்வாலி பகுதியில் உள்ள முக்கிய பேருந்து நிலைய போலீஸ் சாவடியில் இருந்து வெறும்…
நடிகர் ராகவா லாரன்ஸ், முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவார் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. மேலும்,…
உத்தரப் பிரதேச மாநிலம், மிர்சாமுராத் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில்,கடந்த 2019-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருவரை, அவரது…
வங்கதேசத்தின் சுனாம்கஞ்ச் மாவட்டம், தாஹிர்பூர் எல்லைக் கிராமத்தில் 7 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கடந்த…
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள மாரம்பேடு பகுதியில் ஜூன் 6-ஆம் தேதி இரவு, சாலையோரப் பள்ளத்தில் இளைஞர் ஒருவர்…
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே, 14 வயது மதிக்கத்தக்க தனது வளர்ப்பு மகளுக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த…