திண்டுக்கல்லில் விநாயகர் விசர்ஜன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் பேரரசு, “விஜய் அரசியல்வாதி ஆகிவிட்டார். அதனால் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறியுள்ளார். ஆனால் சிலர் கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள். தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. அரசியல் பொது வாழ்விற்கு வந்துவிட்டால் அவர்கள் அனைத்து மதத்தினருக்கும், ஜாதியினருக்கும் சமமானவர்கள். ஹிந்து மதத்திற்கு மட்டும் பாரபட்சம் பார்ப்பது துரோகம், ஹிந்துக்களுக்கு ஓட்டு வாங்க வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாட்டில் எந்த அரசியல்வாதிக்கும் இல்லை.
காரணம் இந்துக்களிடையே ஒற்றுமை இல்லை. எம்ஜிஆர் போன்ற செல்வாக்கு மிகுந்த நடிகரை பார்க்க முடியாது. அவரையே கூத்தாடி என்று சொன்னார்கள். எம்ஜிஆர் அரசியலுக்கு வந்ததும் அவரை மலையாளி என்று சொன்னார்கள். இன்று விஜயை கூத்தாடி என்று சொல்கிறார்கள். எம்ஜிஆர் கூத்தாடி என்று சொன்னதால் அவர் தோற்றுப் போகவில்லை. சிவனும் கூத்தாடி தான். கூத்தாடி என்றால் அவமானமா? உதயநிதியும் நடிகர் தான். அப்படி என்றால் அவரும் கூத்தாடிதான். துணை முதலமைச்சர் துணைக் கூத்தாடி என்று சொல்லலாமா? விஜய் கூத்தாடி என்றால் உதயநிதியும் கூத்தாடி தான்” என்று பேசியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…