#image_title
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், பிரேம்ஜி, சினேகா லைலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில் தனது 69-ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்தார்.தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியையும் தொடங்கினார்.இயக்குனர்களான எச்.வினோத், வெற்றிமாறன், அட்லி ஆகியோர் விஜயின் கடைசி படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வலம் வந்தது.
இந்த நிலையில் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் விஜய் வேறு ஒரு படத்தை எடுத்து முடித்துவிட்டு வாருங்கள் என கூறுகிறாராம். மேலும் 60 நாள்தான் கால்ஷீட் அதற்குள் படத்தை முடிக்க வேண்டும் எனவும் கூறுகிறாராம்.இந்த நிலையில் சூர்யா 44வது படத்தை இயக்க உள்ளதால் கார்த்திக் சுப்புராஜ் தளபதியின் படத்தை இயக்குவதற்கு வாய்ப்பே இல்லை.
இன்னொரு புறம் விஜய் போட்ட கண்டிஷனுக்கு ஏற்றவாறு நடிகர் தனுஷை வைத்து எச்.வினோத் ஒரு படத்தை இயக்க உள்ளார். எனவே தனுஷ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு அடுத்ததாக தளபதியின் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் தளபதியின் கடைசி படத்தின் இயக்குனர் எச்.வினோத் தான் இயக்குவார் என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
எம்.எஸ். தோனியின் 45-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அவரது ரசிகர்கள் பிரம்மாண்ட கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது…
திமுக மறுசீரமைப்பு குழுவில் இளம் நிர்வாகிகளான பரந்தாமன், எழிலன் போன்றோர் நியமிக்கப்பட்டிருப்பது அக்கட்சியின் சீனியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.…
ஆந்திர மாநிலம் அனகாபள்ளியைச் சேர்ந்த அப்பலநாயுடு மற்றும் ஹேமா தம்பதிக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிய நிலையில், இரு பெண்…
டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2026 இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில், சர்வதேச போட்டி ஒன்றின் போது…
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்ப்பதற்காக, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க பேரம்…
திருவண்ணாமலை தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைக்கப்பட்டதைக் கடுமையாக எதிர்த்து, "அவரை கட்சியில் இணைத்ததன்…