எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் விஜய்யின் அரசியல் வருகையும், அதைத் தொடர்ந்து அவர் அடைந்துள்ள அரசியல் மைல்கற்களும் தமிழக அரசியலில் மீண்டும் ஒரு புதிய விவாதத்தைத் தொடங்கியுள்ளன. திரையுலகில் அடைந்த பிரம்மாண்ட புகழையும் ரசிகர் பலத்தையும் முதலீடாக்கி முதலமைச்சர் நாற்காலி வரை செல்ல முடியும் என்ற நம்பிக்கை, தற்போதுள்ள பல முன்னணி நடிகர்களுக்கும் உருவாகியிருக்கிறது. விஷால் போன்ற நடிகர்கள் தங்களது அரசியல் விருப்பத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி வரும் வேளையில், அடுத்தடுத்த தலைமுறை நடிகர்களும் அந்தப் பாதையை நோக்கி மெதுவாக எட்டிப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், நடிகர் தனுஷும் தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து ‘மக்கள் இயக்கமாக’ மாற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், வெறும் சந்திப்போடு நின்றுவிடாமல் மக்கள் பிரச்சினைகளைக் கண்டறிந்து சேவை செய்ய வேண்டும் என்றும், நாம் ஒரு இயக்கமாக மாற வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகனை அரசியலுக்கு உயர்த்தியது போல, தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவும் திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருவதாகவும், அதற்குப் பின்னணியில் தான் தேசிய விருதுகள் உள்ளிட்ட அங்கீகாரங்கள் கிடைத்ததாகவும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, சமூக வலைதளங்களில் இதுகுறித்த அரசியல் கணிப்புகளும் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆதரவாளரான சூர்யா சேவியர் தனது பதிவில், “பிற்படுத்தப்பட்ட மற்றும் மொழிச் சிறுபான்மையினரை ஒருங்கிணைத்து, பாஜகவின் இலக்குகளுக்கு வலு சேர்க்கும் விதமாகவே தனுஷ் அரசியலில் களமிறக்கப்படுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார். ஜோசப் விஜய், அண்ணாமலை மற்றும் ரஜினி குடும்பத்தினரின் ஆதரவோடு தனுஷ் ஆகிய மூவரும் மறைமுகமாக ஒன்றிணைந்து திராவிட அரசியலுக்கு எதிராக மும்முனைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனை எதிர்கொள்வதே தமிழகத்தைக் காக்கும் இலக்கு என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
சூர்யா சேவியரின் இந்த அரசியல் கணிப்புக்கு இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் கடும் பதிலடி கொடுத்துள்ளார். “இவர்கள் அனைவரும் பயத்தில் பித்துப் பிடித்து அலையத் தொடங்கிவிட்டார்கள்; இனி திராவிடம் இங்கே தலைதூக்க முடியாது. தமிழ்நாடு என்பது ஆன்மீக மண், உங்களின் ஆட்டம் எல்லாம் முடிந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், இனி அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு எனக் குறிப்பிட்ட அவர், இயக்குநர் வெற்றிமாறன் நிச்சயமாக முருகன் கதையை அடிப்படையாகக் கொண்டு படம் எடுத்துதான் ஆக வேண்டும் என்றும், இனி ‘ஓம்’, ‘நமச்சிவாய’ போன்ற ஆன்மீகத் தலைப்புகளில்தான் திரைப்படங்கள் வரும் என்றும் சவாலாகப் பதிவிட்டுள்ளார்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…