நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான படம் இட்லி கடை. இந்த படத்தைத் தொடர்ந்து இந்தியில் அவர் நடித்த தேரே இஷ்க் மெயின் என்ற படமும் வெளியானது. அதைத் தொடர்ந்து போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்ற படத்தில் நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் டி 55 என்ற படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து தனுஷ் தனது 56வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் டைரக்ட் செய்கிறார். ஏற்கனவே தனுஷ் நடித்த கர்ணன் படத்தை மாரி செல்வராஜ் டைரக்ட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது இயக்கத்தில் உருவாக உள்ள டி56 படம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் இப்போது முக்கிய தகவலை கூறியுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் டி 56 படப்பிடிப்பு துவங்கும். இந்த படம் அரசியல் மற்றும் வரலாறு சார்ந்த கதைகளத்தில் உருவாகிறது. இந்த படம் என்னுடைய சினிமா பயணத்தில் மிகப்பெரிய படமாக அமையும் என்று மாரி செல்வராஜ் கூறியிருக்கிறார்.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…