#image_title
இயக்குநர் மணிபாரதி, பல ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் வசந்த் உடன் பணிபுரிந்தவர். அப்போது அஜீத்குமார், சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ் நடித்த ஆசை படத்தை வசந்த் டைரக்ட் செய்த போது, அவருடன் மணிபாரதி, எஸ்ஜே சூர்யா, மறைந்த நடிகர் மாரிமுத்து ஆகியோர் அந்த படத்தில் பணிபுரிந்துள்ளனர். அந்த அனுபவங்கள் குறித்து இயக்குநர் மணிபாரதி, நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, இன்று நடிகராக, இயக்குநராக பெரிய இடத்தில் இருக்கும் எஸ்ஜே சூர்யா, ஆரம்பத்தில் நிறைய கஷ்டங்களை அனுபவித்தவர். வறுமையில் வாழ்ந்தவர். வீட்டுக்கு செல்வதற்கும், இயக்குநர் அலுவலகத்துக்கு வருவதற்கும் எப்போதும் எஸ்ஜே சூர்யா பஸ்சில் வந்ததே இல்லை. பைக், கார் என ஏதாவது ஒரு வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்துவிடுவார். பஸ்சில் அவர் பயணித்ததே இல்லை.
#image_title
ஆசை படத்துக்காக 3 வீடுகளில் படப்பிடிப்பு நடத்த வேண்டும். அந்த 3 வீடுகளை கண்டுபிடித்து, ஏற்பாடு செய்து கொடுத்தவர் எஸ்ஜே சூர்யாதான். ஆசை படத்தில் நடிக்க ஒரு நாய்க்குட்டி தேவைப்பட்டது. அந்த நாய்க்குட்டியை வெட்னரி டாக்டரிடம் கேட்டு வாங்கி வந்ததும் அவர்தான். இப்படி ஆசை படப்பிடிப்புக்காக எஸ்ஜே சூர்யாவின் உழைப்பும், பங்களிப்பும் மிக அதிகமாக இருந்தது. இந்த சூழலில், டெல்லி குலுமணாலி பகுதிகளில் 12 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் என்னை ஒருவரை தவிர மற்ற யாரும் வரவேண்டாம். அவ்வளவுதான் பட்ஜெட் என்று கூறிவிட்டனர். ஆனால் டெல்லி வர எஸ்ஜே சூர்யா மிக ஆசைப்பட்டார். நான் டைரக்டர் வசந்திடம் கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை.
இந்த நிலையில், டெல்லியில் நடக்கும் ஷூட்டிங்கில் நாய்க்குட்டியும் இருக்க வேண்டும். அது நடிக்கும் காட்சிகளும் வரவேண்டும். அதனால் நாய்க்குட்டியை வைத்திருக்கவும், பராமரிக்கவும் ஒருவர் வேண்டும் என்பதால், அதற்காக எஸ்ஜே சூர்யாவை அழைத்துச் செல்லலாம் என நான் டைரக்டரிடம் பேசி சம்மதிக்க வைத்தேன். போட்டிருந்த பேண்ட் சட்டையுடன், நாய்க்குட்டியை எடுத்துக்கொண்டு டெல்லிக்கு ரயிலில் ஏறிவிட்டார் எஸ்ஜே சூர்யா.
மாற்றுத்துணி கூட அவர் கொண்டுவரவில்லை. அங்கிருந்த 12 நாட்களும் அவர் அந்த ஒரே பேண்ட் சட்டையில் தான் இருந்தார். படப்பிடிப்பு பணிகளில் கலந்துக்கொண்டார். இரவில் அந்த ஒரு டிரஸ்சை துவைத்து காய வைத்து, காலையில் போட்டுக்கொள்வார். இப்படி ஒரு முனைப்பாகவும், உழைப்பதிலும் ஆர்வமாக இருந்ததால்தான் இன்று அவர் உச்சத்தில் இருக்கிறார் என்று கூறியிருக்கிறார் இயக்குநர் மணிபாரதி.
கொளத்தூர், அன்னை சத்ய நகரைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளி சரண்ராஜ் (36), தனது மனைவி முத்துவாரியம்மாளை (38) திங்கட்கிழமை இரவு…
மதுநாப்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சித்திக் நகர், அஞ்சையா நகர் பகுதியில் மின்தாக்குதலுக்குள்ளாகி புலம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…
பாகல்கோட் தாலுகாவில் உள்ள முகலோலி தான்டா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் கூரை, மாணவர்கள் வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்தபோது திடீரென இடிந்து…
மும்பை காந்திவலி கிழக்கு லோகந்த்வாலா வளாகத்தில் விகாஸ் குட்டே என்ற இளைஞர் முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டு வந்த மர்ம நபரால்…
ரக்ஷா பந்தன் திருநாளன்று, ஒரு பெண் தன் உடன்பிறவா சகோதரனுக்கு ராக்கி கட்டுவதற்காக மிகுந்த உற்சாகத்துடன் நடந்து சென்றுகொண்டிருந்தாள். வழியில்…
தமிழக அரசியலில் சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் எதிர்கால பிரதமர் வேட்பாளர் குறித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.…