தமிழ் திரை உலகில் தரமான படங்களை கொடுத்து வருபவர் தான் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். மதுரையை சேர்ந்த இவர் ஒரு எஞ்சினியர். பெங்களூரில் ஐடி வேலை பார்த்த இவர் பிறகு அமெரிக்கா பறந்து சினிமா பக்கம் திரும்பினார். 2010 காலகட்டத்தில் சினிமா மீது தீராத காதல் கொண்ட இளைஞர்களை கண்டறியும் களமாக கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் அடையாளம் காணப்பட்ட இயக்குனர்களில் ஒருவர் தான் கார்த்திக் சுப்புராஜ். இந்த நிகழ்ச்சியில் காட்சிப்பிழை படம் மூலம் கவனத்தை ஈர்த்த அவர் அடுத்தடுத்த எபிசோடுகளில் தனது படங்களால் கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு வெளியான சிறிய பட்ஜெட் சஸ்பென்ஸ் கலந்த திகில் படமான பீட்சா மூலம் இயக்குனராக அறிமுகமானார். படத்தின் வித்தியாசமான கதைக்களம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் கொடுத்தது.
அடுத்து மியூசிக்கல் கேங்ஸ்டர் படமாக ஜிகர்தண்டா படத்தை மதுரையை மையமாக வைத்து இயக்கினார். அதுவும் சூப்பர்ஹிட் கொடுத்த நிலையில் தொடர்ந்து இறைவி. மெர்குரி உள்ளிட்ட படங்களை இயக்கினார். இதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன்படி பேட்ட திரைப்படத்தை உருவாக்கி இருந்தார். இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுத்து அவரது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். அடுத்து சூரிய 44 நான்கு திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அளித்த பேட்டியில், நான் எந்த கதை எழுதினாலும் அதை ரஜினியை மனதில் வைத்து தான் எழுதுவேன். ஏதாவது ஒரு படத்தின் ஒன் லைன் தோன்றினாள் அதை உடனே அவரிடம் சொல்வேன். அதன்படி பேட்ட திரைப்படத்தை முடித்த பிறகு மகான் படத்தின் கதையை அவரிடம் ஒன் லைன் ஆக மட்டும் சொன்னேன். அந்த படத்தை பார்த்து ரஜினியை இந்த கதையை என்னிடம் சொல்லலை என்று கேட்டார். நான் அவரிடம் சொன்னதாக சொன்னேன்.
ஆனால் வெறும் ஒன் லைன் ஆக மட்டும் அவரிடம் கதையை சொன்னதால் அது அவரை கவரவில்லை. பிறகு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் பார்த்த பின்பு அவர் ஏன் இந்த கதையை எனக்கு சொல்லவில்லை என்று கேட்டார். அந்த கதையும் நான் உங்களிடம் சொன்னேன் ஆனால் ஆன்லைன் மட்டும் தான் சொன்னேன் என்று கூறினேன். அடுத்த முறை அவரிடம் ஏதாவது கதை சொன்னால் அதை முழுவதுமாக டெவலப் செய்துவிட்டு தான் சொல்ல வேண்டும் என்று வைத்திருக்கிறேன் என கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…