தமிழ் சினிமாவில் சூர்யா என்ற முன்னணி நடிகரை உருவாக்கிய பங்கு இயக்குனர் பாலாவுக்கு தான் சேரும். ஒரு வெற்றிக்காக கடுமையாக போராடிக் கொண்டிருந்த சூர்யாவை நந்தா திரைப்படம் மூலமாக நடிகராக மாற்றியவர் தான் பாலா. நந்தா படம் மூலமாக தான் சூர்யாவை தேடி பல இயக்குனர்கள் படையெடுக்க தொடங்கினர். அந்த படம் மூலமாகத்தான் சூர்யாவால் எப்படிப்பட்ட கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை அனைத்து இயக்குனர்களுக்கும் வந்தது. எந்த அளவிற்கு தன்னுடைய சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த பாலா மீது சூர்யா தனி ஒரு அன்பும் அறியாதையும் வைத்துள்ளார். இந்த நிலையில் நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து சூர்யா மற்றும் பாலா இருவரும் மீண்டும் வணங்கான் என்ற திரைப்படம் மூலமாக இணைந்தனர்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே இந்த படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டது. பின்னர் இந்த படத்தில் இருந்து சூர்யா விலகுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அருண் விஜய் இந்த படத்தில் ஹீரோவாக நடித்த கமிட்டான நிலையில் தற்போது பாலா அருண் விஜயை வைத்து வணங்கான் படத்தை முடித்து விட்டார். வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பாலாவின் 25 விழாவும் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது.
இந்த விழாவிற்கு சூர்யாவும் வந்திருந்த நிலையில் பாலா பற்றி பெருமையாக பேசி இருந்தார். இப்படி இருக்கையில் சூர்யா ஏன் வணங்கான் படத்திலிருந்து விலகினார் அதற்கான காரணம் என்ன என்று ரசிகர்கள் பேசி வந்தனர். இப்படியான நிலையில் பாலா அதற்கான காரணத்தை சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அதில், சூர்யா வணங்கான் படத்திலிருந்து விலகவில்லை. வேறொரு கதையை நாம் எடுக்கலாம் எனக் கூறி இருவரும் சமரசமாக நினைவை தான் எடுத்தோம். ஏனென்றால் வணங்கான் கதைப்படி லைவ் லொகேஷன் இல் தான் இந்த திரைப்படத்தை படமாக்க முடியும்.
பல சுற்றுலா இடங்களிலும் படமாக்க வேண்டும். சூர்யாவை வைத்து பொது இடங்களில் படப்பிடிப்பை நடத்துவது மிகவும் கஷ்டமாக இருந்தது. ஏராளமான ரசிகர்கள் படபிடிப்பு தளங்களில் கூடி விட்டன. இதனால் படப்பிடிப்பு நடத்த கடினமாக இருந்தது. எனவே வேறு ஒரு கதையை நாம் பண்ணலாம் என்று கூறி இந்த படத்தில் இருந்து சூர்யா விலகினார். இது நாங்கள் இருவரும் பேசி எடுத்த சமரசம் முடிவு தான். எங்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று பாலா விளக்கம் அளித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…