#image_title
தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான மைல்கல் திரைப்படமாக கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியானது பருத்தி வீரன் திரைப்படம். இந்த படத்தில் அறிமுகமான கார்த்தி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கிறார். அந்த படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றனர், அந்த படத்தில் பணியாற்றிய அனைவரும்.
இதில் இயக்குனர் அமீர் கொடுத்த கலையுச்சம் பெற்ற படைப்பு என்று பருத்திவீரன் படத்தை சொல்லலாம். அந்த படத்தில் கார்த்தியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி அவருக்கு 100 படங்களில் நடித்த கதாநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பைக் கிடைக்கவைத்தார். அந்த படைப்பின் பாதியைத் தொடுமளவுக்குக் கூட அமீரால் தன்னுடைய அடுத்த படத்தைக் கொடுக்க முடியவில்லை.
இந்த படத்தின் உருவாக்கத்தின் போது தயாரிப்பு தரப்போடு அவருக்கு பிரச்சனை எழுந்தது. படம் ரிலீஸாகி 17ஆண்டுகள் கழித்தும் இன்னும் அந்த பிரச்சனை தீரவில்லை. அதற்கு முக்கியக் காரணமாக இயக்குனர் அமீருக்கு தரவேண்டிய ஒரு கோடி ரூபாய்க்கு மேலான பணத்தை தராமல் ஞானவேல் ராஜா ஏமாற்றிவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் நடித்ததற்காக முத்தழகு கதாபாத்திரத்திற்காக பிரியாமணி சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். இந்நிலையில் பிரியாமணி பற்றி ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் அமீர் பருத்திவீரன் படத்துக்குப் பிறகு அவரை ஒருமுறை கூட நான் சந்திக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
அந்த நேர்காணலில் “பிரியாமணி முதலில் பருத்திவீரன் படத்துக்கு டப்பிங் பேச மாட்டேன் என்று சொல்லிவிட்டார். நான்தான் வற்புறுத்தி அவருக்கு சொல்லிக் கொடுத்து டப்பிங் பேசவைத்தேன். அவருக்கு அந்த படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. ஒரு வேளை அவர் டப்பிங் பேசியிருக்காவிட்டால் தேசிய விருது கிடைத்திருக்காது. ஆனால் அதற்காக அவர் எனக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை.
அதன் பிறகு இத்தனை ஆண்டுகளில் நான் அவரை சந்தித்ததே இல்லை. பருத்திவீரன் படத்தில் நடித்த பின்னர் என்னை வந்து சந்தித்து நன்றி தெரிவித்த ஒரே ஆள் நடிகர் சரவணன் மட்டும்தான்.” எனக் கூறியுள்ளார்.
கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…
சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…
தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…
பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…
மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…
பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…