#image_title
தொகுப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக மாறியவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே 21 ‘அமரன்’ படத்தில் நடித்து வருகிறார் இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவம் தயாரித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே 23 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் 2022 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ‘டான்’. இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி.
இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து தளபதி விஜய் அவர்களை வைத்து சக்ரவர்த்தி ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் என கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ‘டான்’ படத்திற்கு பிறகு இயக்குனர் சிபி சக்கரவர்த்தி எந்த திரைப்படத்தையும் இதுவரை இயக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரபல இயக்குனர் சிபி சக்கரவர்த்தி ஒரு புத்தம் புது bmw காரை வாங்கியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே இது தொடர்பான புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் தனது இனஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ‘ஒரே படத்தில் உங்க வாழ்க்கை ஓஹோன்னு மாறிடுச்சே’ என்று கமெண்ட் செய்வதோடு, அவருக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…