1997-ல் கலைஞர் சொன்ன அந்த உண்மையான காரணம்…. மஞ்சள் துண்டு பின்னணியில் இருக்கும் ரகசியம்…. அமைச்சர் நிர்மல் குமாரை இறங்கி அடித்த திமுக ஐடி விங்….!

Spread the love

தமிழக சட்டமன்றத்தில் நிலவிய விவாதங்களின் போது, மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு.கருணாநிதி ஜோதிட காரணங்களுக்காகவே மஞ்சள் துண்டு அணியத் தொடங்கினார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் இந்த விவாதம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக தரப்பில் இதன் உண்மை பின்னணி சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. வரலாற்றுப்பூர்வமாக இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கடந்த 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கருணாநிதி அவர்கள் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளது.

அக்கடிதத்தில், தான் மஞ்சள் நிறச் சால்வையை அணியத் தொடங்கியதற்கான மருத்துவக் காரணத்தை அவர் விரிவாகப் பதிவு செய்திருந்தார். சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தன் வலது கன்னத்தில் ஏற்பட்ட மாம்பிஞ்சு அளவிலான வீக்கம் காரணமாக சென்னை மலர் மருத்துவமனையில் சோதனைகள் மேற்கொண்டதாகக் குறிப்பிட்டிருந்தார். பரிசோதனையில், உமிழ்நீர் சுரப்பியுடன் இணைந்த மெல்லிய நரம்புக் குழாயில் ஏற்பட்ட வெடிப்பினால் உமிழ்நீர் தேங்கி அவ்வீக்கம் உருவானது கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிட்டும், பின்னர் அதன் பக்கவிளைவுகளைக் கருதி மருத்துவர்கள் மாத்திரைகள் மூலம் அதைக் குணப்படுத்த முடிவு செய்தனர்.

சிகிச்சைக்குப் பிறகு, கழுத்தும் முகமும் எப்போதும் கதகதப்பான வெம்மையுடன் இருக்க வேண்டும் என்றும், வழக்கமான கைத்தறித் துண்டிற்குப் பதிலாகக் கம்பளிச் சால்வையை கழுத்தில் படுமாறு அணியுமாறும் நரம்பியல் நிபுணர்கள் அறிவுறுத்தினர். மருத்துவர்களின் ஆலோசனையை ஏற்று அவர் முதன்முறையாக அணிந்த கம்பளிச் சால்வை மஞ்சள் நிறத்தில் அமைந்தது. இதைக் கண்ட குடும்பத்தினரும் நண்பர்களும், “இந்த நிறம் நன்றாக இருக்கிறது, இதையே உங்களின் தனி அடையாளமாக அணிந்து கொள்ளுங்கள்” என்று அன்போடு கேட்டுக்கொண்டதால், அதைத் தொடர்ந்து பயன்படுத்தத் தொடங்கினார்.

தாடி, தொப்பி அல்லது கையில் பிரம்பு வைத்திருப்பது போல, இந்த மஞ்சள் சால்வையும் தனது ஒரு தனித்துவ அடையாளமாக இருக்கட்டும் என்ற எண்ணத்திலேயே அதைத் தொடர்ந்து அணிந்ததாகக் கருணாநிதி தெளிவுபடுத்தினார். தன் மீது வைக்கப்பட்ட மூடநம்பிக்கை சார்ந்த விமர்சனங்களைக் கண்டு தமக்கு சிரிப்பு மட்டுமே வந்ததே தவிர, கோபம் வரவில்லை என்றும் அவர் அக்கடிதத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம், தமது மஞ்சள் துண்டு பயன்பாடு ஜோதிட நம்பிக்கை சார்ந்ததல்ல, மாறாக மருத்துவ ஆலோசனையினாலும் அன்பான வேண்டுகோளினாலும் உருவான ஒரு தனி அடையாளமே என்பதை அவர் அன்றே தெளிவுபடுத்தியுள்ளார்.

Nanthini

Recent Posts

ஐயோ… நண்பனின் மனைவியுடன் தொடர்பா?… தட்டிக் கேட்ட கணவர்… தடுக்க வந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்… தருமபுரியில் திடுக்கிடும் பின்னணி…!

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், தடுக்க வந்த மற்றொரு நண்பர் கத்தியால்…

18 minutes ago

ஷாக்… 100 கோடி லஞ்சம் கொடுத்த பள்ளிகளை ஏன் விசாரிக்கல?… ஊழல் வழக்கில் பாய்ந்த அன்பில் மகேஷின் அதிரடி கேள்வி… இணையத்தில் பெரும் வைரல்…!!

தனியார் பள்ளிகளுக்கு 20 ஆண்டு கால நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.400 கோடி முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட…

25 minutes ago

அவர் கிறிஸ்தவர்… டைரியை எரித்த அம்மா… வீட்டில் கிளம்பிய எதிர்ப்பு குறித்து… ஓபனாக பேசிய கீர்த்தி சுரேஷ்… இணையத்தில் வைரல்…!

நடிகை கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஆண்டனி தட்டிலுடனான தனது 15 ஆண்டு கால காதல் மற்றும் திருமணம் குறித்து சுவாரஸ்யமான…

35 minutes ago

சாதி ஓட்டு எனக்கு தீட்டுன்னு சொன்னாரே தம்பி?… அம்பாசமுத்திரத்தில் சாதி கணக்கு போட்டு களமிறங்கும் சீமான்… தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!!

2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், அதிமுகவிலிருந்து விலகிய இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார், எம்.ஆர். விஜயபாஸ்கர்…

53 minutes ago