#image_title
தமிழ் சினிமாவில் 90 களில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசை ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்த போது தனி வழியில் சென்றவர்தான் தேனிசைத் தென்றல் தேவா. விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களொடும், பாலச்சந்தர், பாரதிராஜா, வசந்த் என முன்னணி இயக்குனர்களோடும் பணியாற்றி பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார்.
சமீபகாலமாக படங்களுக்கு இசையமைக்காமல் இருந்த தேவா இப்போது மீண்டும் அறம் கோபி இயக்கும் ஒரு படத்துக்கு இசையமைக்க கமிட்டாகியுள்ளார். தேவாவின் சினிமா வாழ்க்கையில் அவர் ரஜினிக்காக இசையமைத்த அண்ணாமலை மற்றும் பாட்ஷா ஆகிய இரு படங்களும் மைல்கல்லாக அமைந்தன. அதுவரை ரஜினி – இளையராஜா காம்பினேஷன் வெற்றிக்கொடி நாட்டி வந்த நிலையில் தேவா ரஜினி படங்களுக்கு தன் இசையால் புத்துயிர் ஊட்டினார்.
2000 களுக்குப் பிறகு இசையின் வடிவம் மாறியதாலும் புது இசையமைப்பாளர்கள் அறிமுகத்தாலும் தேவா மெல்ல மெல்ல வாய்ப்புகளை இழந்து ஓரம் கட்டப்பட்டார். பல ஆண்டுகள் காணாமல் போயிருந்த தேவா தற்போது சில படங்களுக்கு மீண்டும் இசையமைக்க ஆரம்பித்துள்ளார். அதில் அறம் இயக்குனர் கோபி நயினார் இயக்கும் படமும் ஒன்று.
இந்நிலையில் தேவா தனக்கு முதல் பட வாய்ப்பு எப்படி பல ஆண்டுகள் பல சம்பவங்களால் தள்ளிப் போனது என்பது பற்றி ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதில் “நான் கதாசிரியர் வி சி குகநாதன் படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆனேன். எல்லாம் ஓகே ஆகி அட்வான்ஸ் எல்லாம் கொடுக்கும் கட்டத்துக்கு வந்துவிட்டோம். அப்போது ஒரு நாள் நான் அவரோடு ஏவிஎம் ஸ்டுடியோவில் நின்று பேசிகொண்டிருந்தேன்.
அப்போது ஒருவர் ஓடிவந்து ‘சார் அங்க வந்து பாருங்க சார்… இளையராஜான்னு ஒரு புது இசையமைப்பாளர்… என்னமா வாசிக்குறாருன்னு… அன்னக்கிளின்னு ஒரு படத்துக்கு” என சொல்லிவிட்டு சென்றார். அதன் பிறகு எனக்கு எப்படி அந்த வாய்ப்புக் கிடைக்கும்?” எனப் பேசியுள்ளார்.
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…
தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6…
தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பரச்சேரி கிராம…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அணுஆயுத விவகாரத்தில் நிலவி வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது புதிய திருப்பத்தை…
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல்கள் நிறைவடைந்தவுடன், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28…