Categories: சினிமா

என்னது இரண்டு மூன்று காதலா… லவ் பண்றதை பத்தி இப்படி சொல்லிட்டாங்களே டிடி…

Spread the love

திவ்யதர்ஷினி எனப்படும் டிடி தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நடிகை ஆவார். இவர் சின்னத்திரை விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர். அதிக சம்பளம் வாங்கும் தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் டிடியும் ஒருவர். காபி வித் டிடி, அன்புடன் டிடி போன்ற விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை 20 வருடங்களுக்கு மேலாக தொகுத்து வழங்கியுள்ளார்.

ஆரம்பத்தில் குழந்தை தொகுப்பாளர் ஆடிஷனில் கலந்துகொண்டு 1999 ஆம் ஆண்டு குழந்தை தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கியவர் டிடி. பின்னர் 2003 ஆம் ஆண்டு கமலஹாசன் தயாரித்த ‘நள தமயந்தி’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார் டிடி. 2007 முதல் விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்தார் டிடி.

தொகுப்பாளராக தனது பயணத்தில் திரையுலகின் முக்கியமான மற்றும் பெரும்பாலான பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார் டிடி. டிடி பேட்டி எடுக்கிறார் என்றால் பிரபலங்கள் விரும்பி அந்த நிகழ்ச்சிக்கு வருவர். ஏனென்றால் அவர்களிடம் அவர்கள் பேசும் விதத்திலே பேசி அனைத்து கேள்விகளுக்கும் பதிலை வாங்கி விடுவார் டிடி. கிட்டத்தட்ட விஜய் டிவியின் செல்ல பிள்ளையாகவே இருந்து வந்தார் டிடி.

தற்போது சில வருடமாக மையோ சிட்டிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்ட டிடி தொகுப்பாளினியாக தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். அவ்வபோது இன்ஸ்டா போன்ற தளத்தில் ஆக்டிவாக கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் டிடி. இதில் சமீபத்தில் காதலைப் பற்றி அவர் பேசியிருந்தார்.

அவர் கூறியது என்னவென்றால் காதல் ரொம்ப அழகான விஷயம். நம்ம வாழ்க்கையில் இரண்டு அல்லது மூன்று முறை கூட காதல் வரலாம் தப்பில்லை. ஆனால் ஒரே நேரத்தில் நான்கைந்து காதல்தான் இருக்கவே கூடாது என்று கூறியுள்ளார் டிடி.

admin

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

2 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

2 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

2 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

3 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

3 மணத்தியாலங்கள் ago