“ஃபெயில் ஆக்கிடுவேன்… வீடியோ இருக்கு!”… மிரட்டி சீரழித்த கொடூர ஆசிரியர்… நம்பி டியூஷனுக்கு அனுப்பிய பெற்றோர்… 3 மாத கர்ப்பமாக்கிய கொடூர வாத்தியார்…!!

Spread the love

புதுச்சேரியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர், தனது சமூக அறிவியல் ஆசிரியரான ஜார்ஜ் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். படிப்பில் சுமாராக இருக்கும் மாணவிகளுக்கு இலவசமாக டியூஷன் எடுப்பதாகக் கூறி தனியிடம் ஒன்றை வாடகைக்கு எடுத்த அந்த ஆசிரியர், பாதிக்கப்பட்ட மாணவியை மட்டும் வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே வரவழைத்து அத்துமீறியுள்ளார். ஆசிரியர் செய்த இந்தத் தவற்றை மாணவி எதிர்க்க முற்பட்டபோது, அகமதிப்பீட்டு மதிப்பெண்களைக் குறைத்து பெயிலாக்கி விடுவதாகவும், போலி வீடியோ ஒன்றைக் காட்டி பள்ளியை விட்டே நீக்குமாறு செய்துவிடுவேன் எனவும் மிரட்டி அச்சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

ஆசிரியரின் இந்தத் தொடர் அத்துமீறல்களால் அந்தச் சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாகியுள்ளார். பாலியல் வன்கொடுமை குறித்தோ, கர்ப்பம் குறித்தோ எவ்வித புரிதலும் இல்லாத அந்த மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதே இந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மருத்துவர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குடும்பத்துடன் தலைமறைவாக முயன்ற அந்த ஆசிரியரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கல்லூரி மற்றும் பள்ளியில் படிக்கும் மூன்று பெண் குழந்தைகளுக்குத் தந்தையாக இருக்கும் ஒருவரே, தன் மாணவிக்கு இந்தக் கொடூரத்தை இழைத்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gayathri

Recent Posts

“அன்பிற்குரியவர் தான்… ஆனா இது லூசுத்தனமான விமர்சனம்”…. உதயநிதியை பொளந்து கட்டிய திருமாவளவன்….!

திமுக மாநாட்டில் தவெக அரசை 'சோபா மாடல் அரசு' என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி காட்டமாக விமர்சித்த நிலையில், அதற்கு…

10 minutes ago

மக்களே உஷார்…. சிறுநீரகங்கள் செயலிழக்கும் ஆபத்து… மாத்திரை சாப்பிடும் முன் மத்திய அரசு வெளியிட்ட பகீர் எச்சரிக்கை….!

வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளை அளவுக்கு அதிகமாகவும், மருத்துவரின் ஆலோசனையின்றியும் பயன்படுத்துவது சிறுநீரகங்களை கடுமையாகப் பாதித்து, செயலிழக்கச்…

14 minutes ago

அக். 1 முதல் உங்கள் ரேஷன் கார்டு செல்லாது?…. அரசு எடுத்த அதிரடி முடிவு…. இரவோடு இரவாக ஷாக் நியூஸ்….!

தமிழகத்தில் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக மட்டுமே ரேஷன் கார்டுகளைப் பயன்படுத்திக் கொண்டு, மாதந்தோறும் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப்…

17 minutes ago

“உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்”…. டென்ஷனான தவெக தலைமை… விஜய் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை…. சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்….!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு வரவிருக்கும் இடைத்தேர்தல் கள நிலவரம் சாதகமாக இல்லை என கட்சி நிர்வாகிகளின் கணிப்புகளும் உளவுத்துறை அறிக்கைகளும்…

21 minutes ago

“திருமாவளவனை முதல்வர் ஆக்குவதே எங்கள் கனவு”…. உண்மையை உடைத்த அமைச்சர் வன்னி அரசு… தமிழக அரசியலில் அடுத்த டுவிஸ்ட்….!

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை அருகே அமைந்துள்ள கொடுக்கூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்…

24 minutes ago

இடைத்தேர்தலில் யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்…. தவெகவுக்கு ஆப்பு வைக்கும் அதிமுக, திமுக…. ஐடிபிஎஸ் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்….!

தமிழகத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போதே தீவிரமடைந்துள்ளது. இந்தத்…

29 minutes ago