உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமணமான முதல் இரவிலேயே மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மணமகள் கொடுத்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவைச் சேர்ந்த ஒரு மருத்துவரின் தம்பிக்கும், ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் சமீபத்தில் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. சடங்குகள் முடிந்து மணப்பெண் தனது புகுந்த வீட்டிற்குச் சென்ற நிலையில், முதலிரவு அறைக்குள் நுழைந்த கணவனிடம் தனக்கு 90 லட்சம் ரூபாய் ரொக்கமாகத் தந்தால் மட்டுமே உறவுக்குச் சம்மதிப்பேன் என மணமகள் கறாராக நிபந்தனை விதித்துள்ளார்.
இந்த விபரீதக் கோரிக்கையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மணமகன், பணம் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் உருவானது. விஷயம் அறிந்த மணமகன் வீட்டார் மணமகளைச் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், மணமகள் தனது முடிவில் உறுதியாக இருந்ததுடன், தனது உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தார். சிறிது நேரத்திலேயே மணமகளின் உறவினர்கள் அங்கு திரண்டு வந்து, மாப்பிள்ளை வீட்டார் மீது தாக்குதல் நடத்தியதுடன், அவர்களை வீட்டின் உள்ளேயே வைத்துப் பூட்டிச் சிறைபிடித்தனர்.
நிலைமை மோசமடைந்த நிலையில், மணமகள் வீட்டார் அங்கிருந்த பிஎன்ஜி (PNG) எரிவாயு குழாயை உடைத்து வீட்டை எரிக்கவும் முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. எரிவாயு கசிவு ஏற்பட்டு பெரும் விபத்து ஏற்படும் சூழல் உருவானபோது, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மணமகன் வீட்டார் ஒருவழியாக உயிர் தப்பினர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட மணமகள், வீட்டில் இருந்த நகை மற்றும் விலையுயர்ந்த பொருட்களைச் சுருட்டிக்கொண்டு தனது உறவினர்களுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இச்சம்பவம் குறித்து மணமகன் வீட்டார் முதலில் புகார் அளித்தபோது உள்ளூர் போலீசார் நடவடிக்கை எடுக்கத் தயங்கியுள்ளனர். இதையடுத்து அவர்கள் நீதிமன்றத்தை நாடிய நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் மணமகள், அவரது தந்தை மற்றும் உறவினர்கள் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பணத்திற்காக மட்டுமே இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்ததாக அந்தப் பெண் ஒப்புக்கொண்ட நிலையில், அவரைத் தரகராக இருந்து அறிமுகம் செய்து வைத்த நபரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…