Categories: CINEMA

மனைவியை பிரிந்தாரா ஹர்திக் பாண்டியா..? சோசியல் மீடியாவிலிருந்து நீக்கப்பட்ட போட்டோஸ்.. தீயாய் பரவும் செய்தி..!

ஹர்திக் பாண்டியா அவரது மனைவியான நட்டாஷாவை பிரிய உள்ளதாக சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து தகவல் வெளியாகி வருகின்றது. இந்த ஐபிஎல்-லில் மும்பை அணியின் கேப்டனாக வலம் வந்தவர் ஹர்திக் பாண்டியா. ஐபிஎல் தொடரில் அதிகமான போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்திய ரசிகர்களின் கவனத்தை பெரும்பளவில் ஈர்த்தவர்.

சிறிது காலத்திலேயே இந்திய அணிக்காக தேர்வான இவர் இந்திய அணியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலக கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தவர். t20, ஒரு நாள் ,டெஸ்ட் என அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஆல்ரவுண்டராக தடம் பதித்த ஹர்திக் பாண்டியா தற்போது ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்கு கேப்டனாக மாறி இருக்கின்றார்.

செர்பியா நாட்டில் பிறந்தவர் நடாசா ஸ்டான்கோவிச். மும்பையில் பிரபலமான மாடலாக இருந்து பின்னர் பாலிவுட்டில் 2013 ஆம் ஆண்டு சத்தியாகிரக என்ற படத்தில் பாடல் ஒன்றில் தோன்றிய அறிமுகமானவர். தமிழில் விக்ரம் பிரபுவின் அரிமா நம்பி திரைப்படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கின்றார். ஹிந்தி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இவர் பங்கேற்று இருந்தார்.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா தனது மனைவி நடாசா ஸ்டான்கோவிச்-சை பிரிய இருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து தகவல் வெளியாகியிருக்கின்றது. ஹர்திக் பாண்டியாவும் பாலிவுட் நடிகையான நட்டாஷா ஸ்டோன்கோவிச்சும் கடந்து 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

பின்னர் ஜூலை 30-ம் தேதி இந்த தம்பதிகளுக்கு அகஸ்தியா என்கின்ற ஒரு மகன் பிறந்தான். மகன் பிறந்து 7 மாதம் கழித்து ஹர்திக் பாண்டியா மற்றும் நட்டாஷா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது. இடைத்தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஹர்திக் பாண்டியா மற்றும் நட்டாஷா இருவரும் காதலர் தினத்தை முன்னிட்டு மறுபடியும் திருமணம் செய்து கொண்டனர்.

பிப்ரவரி 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இவர்களது திருமண நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .உதப்பூரில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலில் இவர்கள் திருமணம் மெஹந்தி, சங்கீத், ஹெல்தி என மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தற்போது இருவரும் பிறந்து வாழ்ந்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிங்கிள் புகைப்படத்தை மட்டுமே வெளியிட்டு வருகிறார்கள்.

மேலும் நட்டாஷா பாண்டியா என்ற பெயர் வைத்திருந்த நிலையில் instagram பக்கத்திலிருந்து அந்த பெயரை நீக்கிவிட்டு வெறும் நட்டாஷா ஸ்கோன்விச் என்று மாற்றி இருக்கின்றார். நட்டாஷாவின் பிறந்தநாள் மார்ச் 4ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அதற்கு பாண்டியா எந்த ஒரு பதிவையும் போடவில்லை. மேலும் ஹர்திக் பாண்டியா தொடர்பான புகைப்படங்கள் அனைத்தையும் நட்டாஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி இருக்கின்றார்.

பொதுவாக ஐபிஎல் தொடர்களில் ஹர்திக் பாண்டியாவின் மனைவி நட்டாஷா பங்கேற்பது வழக்கம் தான். ஆனால் இந்த வருடம் நடந்த எந்த ஒரு போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை.  இது போன்ற பல காரணங்களால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகின்றது. ஆனால் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

அவர முதல்ல தப்பா நெனச்சேன்.. ஆனா கூட நடிக்கும் போதுதான் உண்மை தெரிஞ்சிது.. ஓப்பனாக பேசிய கார்த்திகை தீபம் சீரியல் நடிகை..!!

நடிகை மீரா கிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் அபிராமி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே…

1 மணி நேரம் ago

என்னடா இது உள்ள போடுறத வெளியில போட்டு இருக்காங்க.. சங்கர் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கியாரா அத்வானி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தின் வெளியாகி வைரலாகி வருகின்றது. பாலிவுட்டில்…

2 மணி நேரங்கள் ago

யார் சொன்னாலும் தப்பு தப்பு தான்.. சமந்தாவுக்கு ஆதரவாக சொம்பு தூக்கிய பிரபல பாடகியின் கணவர்.. சைலன்ட்டாக ஆப் செய்த டாக்டர்..!

நடிகை சமந்தா மாற்று மருத்துவம் குறித்து சொன்ன அட்வைஸ்க்கு மருத்துவர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த சம்பவம் தற்போது…

2 மணி நேரங்கள் ago

பாகுபலி படத்தின் வசூலை முறியடிக்க போகிறதா கல்கி 2898 AD.. தமிழ்நாட்டுல மட்டும் இத்தனை கோடி வசூலா..?

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி 2828 ஏடி திரைப்படம் 800 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி…

2 மணி நேரங்கள் ago

கும்கி படத்துக்கு மொத்தம் 8 க்ளைமேக்ஸ் இருந்தது… என் பையன கொன்னுடாதீங்க என அழுத பிரபு- பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக இரண்டு தோல்விப் படங்கள் கொடுத்தாலே அந்த இயக்குனரை ஓரம் கட்டிவிடுவார்கள். ஆனால் இயக்குனர் பிரபு சாலமன்…

2 மணி நேரங்கள் ago

உடன் நடித்த நடிகையை வீடு தேடி சென்று பெண் கேட்ட சரத்குமார்.. அசிங்கப்பட்டு திரும்பியதன் பின்னணி..!!

பிரபல நடிகரான சரத்குமார் கடந்த 1986-ஆம் ஆண்டு ரிலீசான சின்ன பூவே மெல்ல பூவே பேசு என்ற படத்தில் நடித்து…

3 மணி நேரங்கள் ago