பாலியல் துன்புறுத்தல் புகாரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) முக்கிய நிர்வாகியான மாத்தூர் சத்யா கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், அகில இந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே. சிவா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மாத்தூர் சத்யாவிற்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், மார்ச் 14-ஆம் தேதி நடைபெற்ற தென் சென்னை மாவட்டக் குழுக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைமை தெரிவித்துள்ளது. மேலும், கட்சியினர் யாரும் இனி அவருடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கட்சித் தொண்டர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ள மாத்தூர் சத்யா, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இதுவரை தனது தரப்பு விளக்கத்தைக் கூற தனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும், தனது வாழ்வில் தான் சந்தித்த அனைவரிடமும் பரஸ்பர சம்மதத்துடனேயே பழகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், பாலியல் புகார்களில் சமரசமற்ற போக்கை கடைபிடிக்கும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…