தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்குத் தமிழக வெற்றிக் கழகமே (தவெக) முழு காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடுமையாகச் சாடியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், இந்த இடைத்தேர்தல் தொகுதி மக்கள் மீது தேவையின்றித் திணிக்கப்பட்ட ஒன்று என்றும், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் அரசியல் ஆதாயத்திற்காகத் தவெகவின் தூண்டுதலால் ராஜினாமா செய்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் இந்த திடீர் முடிவுக்குப் பின்னால் தவெக கொடுத்துள்ள ரகசிய உறுதிமொழிகளே காரணம் என்று சுட்டிக்காட்டிய சண்முகம், “அவர்கள் அதிமுகவிலிருந்து விலகி சுயேச்சையாகச் செயல்பட்டிருந்தால் இந்த இடைத்தேர்தல் வந்திருக்காது; பூனைக்குட்டியைப் போர்வைக்குள் ஒளித்து வைத்திருக்கிறார்கள், அது விரைவில் வெளியே வரும்” என விமர்சித்தார். மேலும், தவெக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களை மக்கள் பிரச்சார களத்தில் விரட்டியடிப்பதே, அக்கூட்டணிக்கு முன்னருந்த ஆதரவு தற்போது கணிசமாகக் குறைந்துள்ளதை வெளிப்படையாகக் காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொதுத்தேர்தலின் போது தொகுதிப் பக்கம் வராத முதல்வர் விஜய், தற்போது வெற்றி பெறுவதற்காகத் தாராபுரத்திற்கு இரு முறை பிரச்சாரத்திற்கு வரத் திட்டமிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, இது தவெகவின் பலவீனத்தையே உணர்த்துகிறது என்றார். ஐந்து நிமிடத்தில் அதிசயங்களைச் செய்வதாகக் கூறும் விஜய், ஒரே தொகுதிக்கு இரண்டு முறை வந்து முகத்தைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பது அவர்களின் தேர்தல் கவலையை வெளிப்படுத்துவதாக அவர் மேலும் எள்ளி நகையாடினார்.
இறுதியாகத் தமது கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசிய பெ.சண்முகம், தவெக அரசுக்கான ஆதரவு என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும், இடைத்தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும் அந்த ஆதரவுத் தொடரும் என்றும் தெரிவித்தார். அதேவேளையில், இந்த இரு தொகுதிகளிலும் இடதுசாரி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலம் சட்டமன்றத்தில் உழைக்கும் வர்க்கத்தின் குரலையும், தொழிலாளர் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் வலுப்படுத்த மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
சுவிக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் ஆர்டர் செய்து பெறப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாக பயனர் ஒருவர் பகிர்ந்த சமூகவலைதளப் பதிவு…
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி அலகின் கீழ் இயங்கும் அலங்காநல்லூர், உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள…
டெல்லி-டேராடூன் அதிவேக நெடுஞ்சாலையில், உத்திரப் பிரதேசத்தின் பாக்பத் பகுதியில் சாலை ஓரத்தில் நட்டப்பட்டிருந்த செடியை நபர் ஒருவர் திருடிச் செல்லும்…
மேட்சல் பகுதியில் உள்ள சாய்பாபா நகர் பேருந்து நிறுத்தத்தில் தெலங்கானா மாநில அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகள் சரியாக நிற்பதில்லை…
அவசரகாலத்தில் விமானத்திலிருந்து வெளியேறும்போது பயணப் பைகளைத் தவிர்த்துவிட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்வதே மிக முக்கியமான கடமையாகும். விமானத்தில் தீ விபத்து…
நவராத்திரி மற்றும் விஜயதசமி உள்ளிட்ட ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த அக்டோபர் மாதத்தில், ஜோதிட ரீதியாக மேஷம், கடகம், துலாம் மற்றும்…