கர்நாடக மாநிலம் பெங்களூரு கம்மகொண்டனஹள்ளி பகுதியில் உள்ள ஆட்டோமொபைல் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அடர்ந்த நச்சுப் புகை சூழ்ந்ததால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தம்பதியினர் மூச்சுத்திணறி கொடூரமாகப் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு கம்மகொண்டனஹள்ளி பகுதியில் உள்ள கட்டிடத்தின் தரைதளத்தில் ஆட்டோமொபைல் கடை செயல்பட்டு வந்த நிலையில், அதன் முதல் தளத்தில் ஆகாஷ் மற்றும் அவரது மனைவி நாகரத்னா ஆகிய தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கில் ஊழியர்களாகப் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் 24 சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் தரைதளத்தில் உள்ள கடையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
கடை முழுவதும் ஆயில் மற்றும் கேஸ் சிலிண்டர்கள் இருந்ததால் தீ மின்னல் வேகத்தில் பரவி, கட்டிடம் முழுவதையும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்தது. இதில் தப்பியோட முடியாமல் வீட்டிற்குள்ளேயே சிக்கிய தம்பதியினர் நச்சுப் புகையை சுவாசித்து மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கங்கம்மன்குடி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அலட்சியமாகச் செயல்பட்ட கடை உரிமையாளர் சபிக் பாஷா மற்றும் கட்டிட உரிமையாளர் ஹிநாயத் உல்லா மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…
பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…
ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…
ஆக்ராவில் பட்டப்பகலில் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம், ஆளும் கட்சியின் செல்வாக்கு எந்த அளவிற்குச் சட்டத்தையும் நீதியையும்…
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள லிபா நகரில் அமைந்துள்ள ஒரு பேக்கரிக்குள் ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறி…
தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டம், மார்க்குகு மண்டலத்தைச் சேர்ந்த போத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான ராம் சரண். இவர்…