Categories: NEWS

உலகத்திலேயே இந்த நாட்டுப் பணத்துக்கு தான் மதிப்பு அதிகமாம்.. அப்போ இந்திய பணத்துக்கு மதிப்பு இவ்ளோ தானா..?

உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான கரன்சிகளையும், நாணயங்களையும் பயன்படுத்தி வருகிறது. ஒட்டு மொத்த உலகத்திற்கும் ஒரே மதிப்பு என்பது சாத்தியமற்றது. ஏனெனில் அங்குள்ள அரசாங்கங்கள், புவியியல் கூறுகள், சந்தை மதிப்பு, கனிம வளம் போன்றவற்றிற்கு ஏற்ப பொருளாதாரத்தைப் பொறுத்து கரன்சி, நாணயங்களின் மதிப்பு தினந்தோறும் மாற்றம் கொண்டதாகவே இருக்கிறது. ஐநா சபையானது 180 நாடுகளின் கரன்சிகளை செல்லும் என அறிவித்துள்ளது. அப்படியாக உலகில் அதிக மதிப்பு மிக்க கரன்சிகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலைத் தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

#image_title

அண்மையில் போர்பஸ் இதழானது வெளியிட்டுள்ள உலகின் மதிப்பு மிக்க கரன்சிகள் பட்டியல் இந்திய ரூபாய் மற்றும் அமெரிக்க டாலருடன் ஒப்பிடப்பட்டுள்ளது.  இதில் 270.23ரூபாய் மற்றும் $3.25 மதிப்புள்ள குவைத் தினார் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. பஹ்ரைன் தினார் இதனைப் பின்தொடர்கிறது, இதன் மதிப்பு ரூ.220.4 மற்றும் $2.65.

ஓமானின் ரியால் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது  (ரூ. 215.84 மற்றும் $2.60), அதைத் தொடர்ந்து ஜோர்டானிய தினார் (ரூ. 117.10 மற்றும் $1.141), ஜிப்ரால்டர் பவுண்ட் (ரூ. 105.52 மற்றும் $1.27), பிரிட்டிஷ் பவுண்ட் (ரூ. 105.54 மற்றும் $1.27), கேயர்மேன் தீவு (ரூ. 9.77), மற்றும் $1.20), சுவிஸ் பிராங்க் (ரூ. 97.54 மற்றும் $1.17), மற்றும் யூரோ (ரூ. 90.80 மற்றும் $1.09) போன்றவை முன்னணியில் இருந்து வருகிறது.

எம்.ஜி.ஆருடன் முகமது அலி.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இரு ஜாம்பவான்கள்

மேலும் உலகம் முழுவதும் வர்த்தகத்தில் பயன்படும் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் ரூ.83.10 மதிப்பைக் கொண்டுள்ளது. மேலும் உலகளாவிய புகழ் மற்றும் முதன்மை இருப்பு நாணய நிலை இருந்த போதிலும், அமெரிக்க டாலர் உலகின் வலுவான நாணயங்களில் 10 வது இடத்தில் உள்ளது என்று ஃபோர்ப்ஸ் குறிப்பிடுகிறது.

இதுமட்டுமின்றி சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இணையதளத்தின் சமீபத்திய மாற்று விகிதங்களின்படி, இந்தியா நாணய மதிப்பில் 15வது இடத்தில் உள்ளது, ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு ரூ.82.9 என பட்டியலிடப்பட்டுள்ளது. குவைத் தினார், 1960 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தொடர்ந்து அதன் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

#image_title

ஏனெனில் குவைத்தின் பொருளாதார வலுவுக்குக் காரணம், ஏராளமான எண்ணெய் வளம் மற்றும் வரியில்லா அமைப்பு ஆகியவற்றால் அரசாங்கம் செயல்படுகிறது. மேலும் ஃபோர்ப்ஸ் இதழானது சுவிட்சர்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைனின் நாணயமான சுவிஸ் பிராங்கை உலகின் மிகவும் நிலையான நாணயமாக பரவலாகக் கருதுகிறது.

மேற்கண்ட பட்டியலானது ஜனவரி 01, 2024 தேதியை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டதாகும்.

John

Recent Posts

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

1 hour ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

1 hour ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

4 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

4 hours ago

விதவைப் பெண்ணுடன் தான் திருமணம்.. சிவகுமாரின் ஜாதகத்தை சரியாக கணித்த பிரபல நடிகை..?

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…

4 hours ago

குட்டை கவுன் அணிந்து.. செம கிளாமராக போஸ் கொடுத்த ‘காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை’.. வைரல் பிக்ஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…

5 hours ago