தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகர்களில் ஒருவர் தான் கூல் சுரேஷ். இவர் கடந்த சில வருடங்களாகவே முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களை முதல் நாளே பார்த்து படம் குறித்து விமர்சனம் செய்து வருகிறார். அதனாலயே இவர் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். அது மட்டுமல்லாமல் இவர் ஒரு தீவிர சிம்பு ரசிகரும் கூட.
எந்த ஒரு திரைப்படம் வெளியானாலும் அந்த படத்தை குறித்து நெட்டிசன்களிடம் முதல் நபராக கருத்து தெரிவிப்பவர் இவர் தான். இந்த நிலையில் சமீபத்தில் மன்சூர் அலிகான் நடிப்பில் வெளியான சரக்கு என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் கலந்து கொண்ட நிலையில் அங்கிருந்த தொகுப்பாளரிடம் கழுத்தில் மாலையை போட்டு சர்ச்சையில் சிக்கினார்.
இதைத்தொடர்ந்து கூல் சுரேஷ் வெளியிட்ட வீடியோவில் நான் அந்த சகோதரி மீது விளையாட்டாக மாலையை போட்டேன். அது தவறுதான் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். நான் மிகவும் வறுமையில் தவிக்கிறேன். எனவே யூட்யூபர்ஸ் எனக்கு பணம் கொடுத்து உதவி செய்யுங்கள் என கூறியும் வீடியோ வெளியிட்டார்.
தற்பொழுது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 7 ல் கலந்து கொண்டுள்ளார். அங்கே சென்று இவர் செய்யும் அலப்பறைகளுக்கு அளவே இல்லை என்று கூறலாம். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்கு வருவதற்கு முன் பிக் பாஸ்-ஐ பற்றி தவறாக பேசிய நடிகர் கூல் சுரேஷின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர், ‘என்னங்க பிக் பாஸ் சின்ன சின்ன புள்ளைங்கள கூட்டிகிட்டு வந்து காலைல எழுந்திருச்ச உடனே அறையும் குறையுமா ஆட வைப்பாங்க’ என நக்கலாக கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ…