திமுகவின் அடிமட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கிலும் நிர்வாகச் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தும் வகையிலும், கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கை 77-லிருந்து 110-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ தொகுதிகள் வரையறைப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
புதிதாகப் பிரிக்கப்பட்ட 110 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமிக்கும் பணியை விரைந்து முடிக்க திமுக தலைமை தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மாவட்டச் செயலாளர்களுடன் தலைமைச் செயற்குழுப் பிரதிநிதிகள் கலந்தாலோசித்து, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளை அமைப்புகளைப் பிரித்து அறிக்கை அளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய நிர்வாகிகள் தேர்வில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூகப் பிரதிநிதித்துவத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
களப்பணிகளை ஒருங்கிணைக்கவும் உட்கட்சி தேர்தலை சுமுகமாக நடத்தி முடிக்கவும் ஏதுவாக, அனைத்து மாவட்டங்களுக்கும் முழுமையான நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிர்வாக எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், தீவிர களப்பணி ஆற்றக்கூடிய நபர்களைக் கண்டறிந்து இறுதிப் பட்டியலை வெளியிடும் பணிகளில் கட்சித் தலைமை முனைப்பு காட்டி வருகிறது.
பீகார் மாநிலம் ஆரா பகுதியில், காதலித்துத் தம்பதியான கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கடும் கருத்து வேறுபாடு ஒரு கொடூர வன்முறையாக மாறியுள்ளது.…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் பயணித்த…
கர்நாடக மாநிலத்தில், புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்த நபரால் மனமுடைந்த ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் மாணவி விஷம்…
வழக்கமாகக் காவல்துறையைக் கண்டாலே வாகன ஓட்டிகள் அஞ்சி நடுங்குவதும், சந்துகளுக்குள் வண்டியைத் திருப்புவதும் தான் அன்றாடக் காட்சி. ஆனால் இங்கே,…
ரோப்டா தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹேமந்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மல்லேஸ்வரி விளக்கமளித்துள்ளார். அறுவை சிகிச்சை…
சாலையில் அசுர வேகமும் அபாயகரமான சாகசங்களும் மட்டுமே துணிச்சலின் அடையாளம் என நினைக்கும் விபரீத வேட்கை, சில நொடிகளில் வாழ்க்கையின்…