2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று தவெக ஆட்சியமைத்துள்ள நிலையில், ஆட்சியைப் கவிழ்க்க சதி செய்ததாக 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம், சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தின் போது தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட ரூ 35 கோடி பேரம் பேசி, அதற்கு அவர் மறுத்தபோது கொலை மிரட்டல் விடுத்ததாக IPDS கருத்துக்கணிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, நரேஷ் மற்றும் தியாகராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
எம்.எல்.ஏ இளையராஜா சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், திமுக முன்னாள் அமைச்சரும் நடப்பு கோவை தெற்கு எம்.எல்.ஏ-வுமான V. செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் V. அசோக்குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரிலும், அவர்களின் அறிவுறுத்தலின் படியுமே தவெக எம்.எல்.ஏ-விடம் திருநாவுக்கரசு இந்த குதிரை பேர முயற்சியில் ஈடுபட்டார் என்பது காவல்துறை விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இது குறித்துப் பேசிய தவெக அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் உத்தரவின் பேரில் செந்தில்பாலாஜி போன்ற ஆட்கள் தவெக எம்.எல்.ஏ-க்களைத் தொடர்பு கொண்டு பல கோடிகளை பேரம் பேசுவதாகவும், இதனால்தான் 30 நாட்களில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் கூறி வருவதாகவும் சாடியுள்ளார். அதேநேரம், தவெக அரசு மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் ஏற்கனவே பல்வேறு அரசியல் சதி மற்றும் குதிரை பேரக் குற்றச்சாட்டுகளை பரஸ்பரம் முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…
சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…
தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…
பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…
மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…
பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…