கோவையில் ஆளுங்கட்சியான திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் திடீரென அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 77-வது வார்டு கவுன்சிலர் ராஜலட்சுமி, 91-வது வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன் மற்றும் தொண்டாமுத்தூர் ரவியின் நெருங்கிய உறவினரான கருணாநிதி ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
திமுகவில் சீனியர்களுக்கு உரிய அங்கீகாரமும் மதிப்பும் அளிக்கப்படுவதில்லை என்ற அதிருப்தியாலேயே இந்த முடிவை எடுத்ததாக ராஜலட்சுமி வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் வேளையில், கோவையில் திமுகவின் முக்கிய தூண்களாகக் கருதப்பட்டவர்கள் விலகியிருப்பது அக்கட்சித் தலைமையினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, கோவை மாவட்ட அரசியலில் அதிமுகவிற்குக் கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளதாகக் கருதப்படுகிறது.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…