தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, தற்போதைய திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்க்க வாய்ப்புள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற காங்கிரஸின் நீண்டகால கோரிக்கையை திமுக தலைமை ஏற்க மறுத்து வருவதே இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், டெல்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் நிலவும் அரசியல் மாற்றங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தலைவர்கள் சமர்ப்பித்த ஆய்வறிக்கையில், திமுக கூட்டணியில் நீடிப்பதை விட மாற்று அணியில் இணைந்தால் காங்கிரஸிற்கு அதிக இடங்களும், ஆட்சியில் பங்கும் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தத் தகவல்கள் திமுக தலைமையிலான அறிவாலய வட்டாரத்தில் கடும் அதிருப்தியையும் கடுகடுப்பையும் உண்டாக்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்குள் இது தொடர்பாக இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன. ஒரு தரப்பினர் பாரம்பரியமாக இருந்து வரும் திமுக கூட்டணியைத் தொடர வேண்டும் என்று விரும்பினாலும், மற்றொரு தரப்பினர் தவெக போன்ற புதிய சக்திகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பதன் மூலம் கட்சியைப் பலப்படுத்தலாம் என வாதிடுகின்றனர். ஒருவேளை காங்கிரஸ் மேலிடம் தவெக-வுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தால், திமுக ஆதரவு நிலையில் உள்ள சில முக்கிய தலைவர்கள் கட்சியை விட்டுப் பிரியக்கூடும் என்றும், இதனால் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைய வாய்ப்புள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர்.
தற்போதைய நிலையில், கே.சி. வேணுகோபால் போன்ற மேலிடத் தலைவர்கள் சென்னைக்கு வந்து மாநில நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையைத் தயார் செய்து வரும் நிலையில், காங்கிரஸின் அடுத்தகட்ட நகர்வு தமிழக அரசியலில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தனது கூட்டணிக் கட்சிகளைத் தக்கவைத்துக் கொள்ளப் போகிறதா அல்லது புதிய கூட்டணிகள் உதயமாகப் போகிறதா என்பது வரும் மாதங்களில் தெளிவாகத் தெரியும்.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…
லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…
பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…