“39 கிடையாது.. 27 போதும்.. ஆனா”…. இறங்கி வந்த காங்கிரஸ்…. ஸ்டாலினுக்கு சோனியா காந்தி அனுப்பிய ரகசிய கடிதம்…. அதிர்ச்சியில் நிர்வாகிகள்…!

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் 39 தொகுதிகள் வரை கேட்டு வந்த காங்கிரஸ் தலைமை, தற்போது தனது பிடிவாதத்தைக் குறைத்துக்கொண்டு 27 தொகுதிகள் போதும் என்ற நிலைக்கு இறங்கி வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தரப்பில் 25 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க வாய்ப்பில்லை என்று கறாராகக் கூறப்பட்ட நிலையில், காங்கிரஸ் இந்த புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே இரு கட்சிகளுக்கும் இடையே ‘ஆட்சியில் பங்கு’ என்ற விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் இது குறித்துப் பேசியபோது, முதல்வர் ஸ்டாலின் அந்தப் பேச்சிற்கே இடமில்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ஒரு கட்டத்தில் கூட்டணி முறியும் சூழல் உருவானபோது, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முடிவை எட்ட உதவினார். சோனியா காந்தியின் தலையீட்டிற்குப் பிறகு, திமுகவுடனான உறவை வலுப்படுத்துவதே முக்கியம் என்று காங்கிரஸ் முடிவெடுத்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையைக் கைவிட்ட காங்கிரஸ், கூடுதல் தொகுதிகளைப் பெற முயற்சித்தது. இருப்பினும், திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு கடந்த முறை வழங்கப்பட்ட 25 தொகுதிகளை மட்டுமே மீண்டும் வழங்க முடியும் என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. ஒரு தொகுதி கூட கூடுதலாகத் தர முடியாது என்று திமுக தரப்பு மறுத்த நிலையில், தற்போது 27 தொகுதிகளுடன் ஒரு ராஜ்ய சபா இடத்தையும் காங்கிரஸ் கேட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, ஒரு ராஜ்ய சபா இடத்தைத் தர திமுக சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார். ஆனால், காங்கிரஸ் எதிர்பார்க்கும் 27 தொகுதிகள் கிடைக்குமா அல்லது திமுகவின் 25 என்ற இலக்கிலேயே பேச்சுவார்த்தை முடியுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். இந்த இழுபறி நீடித்தாலும், மதச்சார்பற்ற கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்வதில் இரு கட்சிகளுமே உறுதியாக உள்ளன.

Nanthini

Share
Published by
Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

9 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

9 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

10 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

10 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

11 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

11 மணத்தியாலங்கள் ago